Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Monday, July 31, 2006

புதிர் - கண்களும் கவி பாடுமே..

விக்னேஷ் ஆரம்பித்துவைத்து பாபா தொடர என்னையும் இந்தப்புதிர் தொத்திக்கொண்டுவிட்டது. கண்ணை வைத்து ஒரு மனிதரையே அடையாளம் காணலாம் என்பதால்தான் இணையத்தில் போடும் சில புகைப்படங்களில் கண்களை மறைத்துவிடுகிறார்கள் போலிருக்கு. சரி, இனி புதிருக்கு போவோம். கண்களே கவிபாடும் என்பதால் ரொம்ப க்ளூ எல்லாம் கிடையாது. சினிமா (கோலிவுட், ஹாலிவுட்), அரசியல், இசை, விளையாட்டு ஆகிய துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் இவர்கள்.


1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.


பல நாடுகளில் உள்ள வலைப்பதிவர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், ஒருவர் விடையை இன்னொருவர் காப்பி அடிக்கக்கூடாது என்பதற்காகவும் (:-}) நீங்கள் அனுப்பும் விடைகளை இன்னும் 24 மணி நேரத்துக்கு வெளியிடப்போவதில்லை. ஆனாலும் விடை அனுப்பியவர்களுக்கு ஆவலை அடக்கமுடியாது என்பதால் 1லிருந்து 10 வரை எந்தெந்த எண்களுக்குரிய விடைகள் சரி என்பதை மட்டும் இங்கு பின்னூட்டமாக வெளியிடுவேன். (ரொம்ப ரூல்ஸ் போடறேனோ.. எல்லாம் ஒரு சுவாரசியத்துக்கு தான்). பாபா, விக்னேஷ், உதயகுமார், கப்பி, சிறில், பொன்ஸ் எல்லாம் களத்துல இறங்குங்க... பார்க்கலாம் யார் நிறைய கண்டுபிடிக்கறாங்கன்னு.

பி.கு. இந்த இடுகையை 'கண்கள்' என்ற குறிச்சொல்லோடு தமிழ்மணத்தில் சேர்த்திருக்கேன். இனி யார் இத்தகைய புதிர் போட்டாலும் அதே குறிச்சொல்லை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கறேன்.

Wednesday, July 19, 2006

ப்ளாக்ஸ்பாட் தடை விலக்கம், அந்நியலோகம் ப்ராக்ஸி

(கீழ்க்கண்ட அறிவிப்பை எழுதிவிட்டு தேசிபண்டிட் பக்கம் பார்க்கிறேன். Rediffல் 48 மணி நேரத்துக்குள் ப்ளாக்ஸ்பாட் தடை விலக்கப்படும் என்ற நற்செய்தி வந்துள்ளது. எல்லாரும் நம்ம பத்திரிகைகளுக்கு ஒரு 'ஓ' போடுங்க. எதுக்கும் கீழ இருக்கறதையும் படிச்சுடுங்க. தடை விலகும்வரை இது உதவும்.)

Pkblogs.com என்ற ப்ராக்ஸி தளத்தின் மூலம் ப்ளாக்ஸ்பாட் பதிவுகளை பார்க்கமுடிவதையும், அதற்கு தமிழ்மணத்தில் காசி சுட்டி கொடுத்திருப்பதையும் பலர் அறிவீர்கள். அதேபோல் நானும் ஒரு ப்ராக்ஸி உண்டாக்கிவிட்டேன். Pkblogs வெறுமனே பக்கத்தில் உள்ள ப்ளாக்ஸ்பாட் சுட்டிகளை Pkblogs சுட்டிகளாக மாற்றுகிறது, அவ்வளவே. அதையே என்னாலும் சுலபமாக செய்யமுடிந்தது.

இந்த பக்கத்துக்கு சென்று உங்கள் (அல்லது மற்றவர்) வலைப்பதிவின் பெயரை மட்டும் நிரப்பி அளித்தால் அந்த பதிவை காணலாம். உதாரணத்துக்கு இட்லிவடையார் idlyvadai என்று நிரப்பினால் போதும். Freedom viewer போல இல்லாமல் முழு பதிவையும் பார்க்கலாம். யாருடைய பதிவைப் பார்ப்பதிலும் பிரச்சனை வராது. சுட்டி இதோ -

http://anniyalogam.com/go.html

Tuesday, July 18, 2006

அ-வை கவனித்தீர்களா?

தமிழ்மணத்தில் முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு இடுகைக்கு முன்னரும் தோன்றும் 'அ' என்ற iconஐ பலர் ஏற்கனவே கவனித்து பயன்படுத்துகிறீர்கள் என்று நம்புகிறேன். கவனிக்காதவர்களுக்காக ஒரு விளக்கம். அது அந்நியலோகம் freedom viewerக்கு அந்த இடுகைக்கான நேரடி சுட்டி. அதை சொடுக்கி இடுகையையும் பின்னூட்ட பக்கத்தையும் பார்க்கலாம். இந்த வசதியை செய்துகொடுத்த காசி அவர்களுக்கு நன்றி.

(இதைப்பற்றி தமிழ்மணம் வலைப்பதிவில் அறிவித்ததாக தெரியவில்லை என்பதால் இந்த பதிவு).

Monday, July 17, 2006

Freedom viewerல் பின்னூட்ட பக்கத்துக்கு சுட்டி!!

http://www.anniyalogam.com/scripts/freedom.php பக்கத்தில் பார்க்கமுடியாத Blogspot பதிவுகளை பார்க்கலாம் என்பது பலருக்கு தெரியும். கூடுதலாக, இனி இடுகையின் பின்னூட்ட பக்கத்துக்கும் சுட்டி இருக்கும். நீங்கள் Blogger.com பக்கத்தை பார்க்கமுடிந்தால், மற்றவர் பதிவுகளில் பின்னூட்டமும் இடலாம்!

இந்த கருவியை பயன்படுத்துவதில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன.

1. பக்கம் முழுவதையும் கீழிறக்காமல் இடுகையை மட்டும் காட்டுவதால் வேகமாக இருக்கும்.
2. எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் நிறுவத்தேவையில்லை.
3. தமிழ்மண URLல்களை அப்படியே கொடுக்கும் வசதி.
4. பின்னூட்டப்பக்கத்துக்கு சுட்டி.

(இந்த கருவியை ஒருசில பதிவுகளுடன் மட்டும் பயன்படுத்தமுடியாது).

Sunday, July 16, 2006

Easy solution for Blogger blockage in India

இந்த பக்கத்துக்கு சென்று தீர்வை பாருங்கள் - http://www.anniyalogam.com/scripts/freedom.php. ப்ளாக்கரை பார்க்கமுடியாதவர்கள் என் பதிவையும் பார்க்கமுடியாது என்பதால் விளக்கத்தை அந்த பக்கத்திலேயே கொடுத்திருக்கிறேன்.

ப்ளாக்கர் தடைக்கு ஒரு சுலபத்தீர்வு

இந்த பக்கத்துக்கு சென்று தீர்வை பாருங்கள் - http://www.anniyalogam.com/scripts/freedom.php. ப்ளாக்கரை பார்க்கமுடியாதவர்கள் என் பதிவையும் பார்க்கமுடியாது என்பதால் விளக்கத்தை அந்த பக்கத்திலேயே கொடுத்திருக்கிறேன்.

Saturday, July 15, 2006

அந்நியலோகம் வழங்கும் அடைப்பலகைகள்

இதுவரை நான் அறிவித்த கருவிகளை தங்கள் அடைப்பலகையில் சேர்ப்பது சிலருக்கு கடினமாக இருந்திருக்கலாம். அவர்களுக்காக தமிழ்மணம் வழங்கும் சில தமிழாக்கம் செய்யப்பட்ட அடைப்பலகைகளுடன் என் கருவிகளை சேர்த்து புதிய அடைப்பலகைகள் தயாரித்துள்ளேன். இந்தப்பக்கத்தில் அவற்றை காணலாம்.

http://www.anniyalogam.com/templates/tamiltemplates.html

இவைதவிர ப்ளாக்கர் வழங்கும் வேறுசில அடைப்பலகைகளையும் மாற்றியிருக்கிறேன். அவற்றில் ஒன்றையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

http://www.anniyalogam.com/templates/templates.html

Thursday, July 13, 2006

புதிய கருவி - Featured post of the day from archives

என்னுடைய இந்த இடுகைக்கு கீழே ஒரு பெட்டியில் 'ஜெட்டா வாங்கலையோ ஜெட்டா' என்று நவம்பர் 2003ல் நான் எழுதிய இடுகை தோன்றுகிறது இல்லையா? இதுதான் என்னுடைய புதிய கருவி. இதன்மூலம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பழைய இடுகைக்கு மறுவாழ்வு அளிக்கமுடியும். நீங்கள் தினமும் எதுவும் புதிதாக எழுதாவிட்டாலும் இந்த பெட்டியில் தோன்றும் இடுகை தானாகவே மாறிக்கொள்ளும். இதனால் உங்கள் பதிவுக்கு வருபவர்கள் (முக்கியமாக இந்த ஆண்டுதான் தமிழ்மணத்தை கண்டுபிடித்த ஏராளமான பேர்) உங்களுடைய பழைய பதிவுகளையும் படிக்கமுடியும். ஒவ்வொரு நாளும் எந்த இடுகை தோன்றுகிறது என்று பார்ப்பதே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு சுவாரசியமாக இருக்கும்!

இந்த கருவி எவ்வகை வலைப்பதிவுகளுக்கு உதவும்?
கதை, கட்டுரை, ஜோக்ஸ் போன்று எப்போதும் படிக்கக்கூடிய பதிவுகளை எழுதும் துளசியக்கா போன்றோருக்கு. சுடச்சுட செய்திகளை அலசும் பத்ரி போன்றவர்களுக்கு பழைய இடுகைகளை வெளிக்கொணர்வதால் பயனில்லாமல் போகலாம்.

இதில் எப்போது இடுகை மாற்றப்படும்?
UTC எனப்படும் Coordinated Universal Time நேரப்படி நாள் மாறும்போது. இந்திய நேரப்படி காலை 5:30 மணி.

இதை உங்கள் வலைப்பதிவில் சேர்க்க என்ன செய்யவேண்டும்?

கீழே ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள வரிகளை, அதற்கு மேலும் கீழும் காட்டப்பட்டுள்ள வரிகளை கண்டுபிடித்து நுழைக்கவேண்டும். நுழைத்தபின் அடைப்பலகையை சேமித்து Republish entire blog செய்யவேண்டும்.


<!-- Begin #comments -->
<ItemPage>
<!-- Featured post of the day -->
<script language="Javascript"
src="http://www.anniyalogam.com/scripts/featurebox.php?myblog=<$BlogURL$>">
</script>
<!-- Featured post of the day -->

<div id="comments">
<BlogItemCommentsEnabled>


இதை செய்ய கடினமாக இருந்தால் சிலநாள் பொறுங்கள். தமிழ்மணம் வழங்கும் அடைப்பலகைகளில் என் எல்லா கருவிகளையும் இணைத்து புதிய அடைப்பலகைகள் வழங்கப்போகிறேன் (காசி அவர்களிடம் அனுமதி வாங்கியபிறகு). நீங்கள் தமிழ்மணத்தின் அடைப்பலகையை அப்படியே பயன்படுத்துபவராய் இருந்தால் இவற்றில் ஒன்றை அப்படியே காப்பி செய்துகொள்ளலாம்.

Tuesday, July 11, 2006

ஸ்பானிஷ் வலைப்பதிவில் Archive Browser

Hack para navegar en tu blog por año - இது நமது Archive Browserஐப்பற்றி ஒரு ஸ்பானிஷ் வலைப்பதிவர் எழுதியுள்ள பதிவின் தலைப்பு. சுட்டி இதோ. Freshblog எனப்படும் Blogger hacks அனைத்தையும் பட்டியலிடும் பிரபலமான வலைப்பதிவில் Archive Browserஐப்பற்றி சொல்லியிருந்தேன். Freshblogஐ நடத்தும் ஜான் என்பவர் இது பயனுள்ள கருவிதான் என்பதை புரிந்துகொண்டு இதைப்பற்றி அங்கு ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார். அங்கு Backlink செய்யப்பட்டிருந்ததுதான் இந்த ஸ்பானிஷ் பதிவு. இந்த தலைப்புக்கு அர்த்தம் Hack to sail in your blog per year. கூகிள் டிரன்ஸ்லேட்டில் கண்டுபிடித்தேன் ;) எப்படியோ, ஆங்கில, ஸ்பானிஷ் பதிவர்களுக்கும் பயன்பட்டால் சரி.

உங்களில் ஏராளமான பேர் இதைப் பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்கள். நிறையபேர் ஏற்கனவே உங்கள் பதிவிலும் சேர்த்துவிட்டீர்கள். அவர்களுக்கு நன்றி. பலர் டெம்ப்ளேட்டை தொட பயப்படுவதாக தோன்றுகிறது. தமிழ்மணம் வழங்கும் டெம்ப்ளேட்டுகளை எடுத்து அவை ஒவ்வொன்றிலும் எனது கருவிகளை சேர்த்து வழங்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள் தமிழ்மண டெம்ப்ளேட்டுகளை அப்படியே பயன்படுத்துபவராய் இருந்தால், இவற்றில் உங்களுக்கு தேவையானதை எடுத்து அப்படியே காப்பி செய்துகொள்ளலாம். "Featured post of the day from archive" என்று ஒரு ஐடியா வைத்திருக்கிறேன். அதையும் செயல்படுத்தியபின் எல்லாம் அடங்கிய டெம்ப்ளேட்டுகளை வழங்கலாம் என்று நினைத்துள்ளேன்.

Sunday, July 09, 2006

Archive Browser Showcase - Do not miss it!

(நேற்று இட்ட இந்த இடுகையின் கமெண்ட்ஸ் பகுதி IEல் சரியாக காண்பிக்கப்படவில்லை என்பதை இப்போதுதான் கவனித்தேன். அதை சரிசெய்துவிட்டேன்.)

பத்ரி, காசி, பாஸ்டன் பாலாஜி, இகாரஸ் பிரகாஷ், சந்திரவதனா, மதி, சுவடு ஷங்கர், துளசி, மாயவரத்தான், டுபுக்கு, உஷா, குழலி. இது என்ன லிஸ்ட்னு கேக்கறீங்களா? இவர்களுடைய 2003, 2004, 2005ம் ஆண்டு ஆக்கங்களை Archive Browserல் திரட்டி அதை Showcase போல ஒரு பக்கத்தில் காட்டியுள்ளேன். இவற்றை பார்க்க நீங்கள் செல்லவேண்டிய பக்கம் - http://www.anniyalogam.com/showcase/showcase.html
சும்மா ஒரு முன்னோட்டம் இதோ.



என் நிரலை பலவிதமான டெம்ப்ளேட்டுகளுடன் ஒத்துப்போக வைப்பதற்காக இவர்களது பதிவுகளை தேர்ந்தெடுத்திருந்தேன். இப்படி Archive Browser உருவாக்கும் அட்டவணைகளை சேமித்துவைத்து இதன் பயன்பாட்டை காண்பிக்கலாமே என்று தோன்றியது.

இந்த கருவியை கடந்த வெள்ளியன்று இதை அறிவித்தபின் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன்.

1. blogger-templates.blogspot.com அளிக்கும் டெம்ப்ளேட்டுகளுடனும் பயன்படுத்தமுடியும். ப்ளாக்கரின் பழைய டெம்ப்ளேட்டுகளுடனும் மற்றும் சில third party வலைத்தளங்கள் அளிக்கும் டெம்ப்ளேட்டுகளுடனும் பயன்படுத்தலாம். ஆனால், இடுகைத்தலைப்பு காட்டப்படாது. பத்ரியின் வலைப்பதிவு ஒரு எடுத்துக்காட்டு.
2. இந்த கருவியை ஆங்கில வலைப்பதிவர்களுக்கும் அறிவிக்கப்போவதால் இடைமுகம் முற்றிலும் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
3. வலைப்பதிவின் யூ.ஆர்.எல்லை கொடுப்பது மட்டுமில்லாமல் கூட ஒரு ஆண்டையும் தேர்ந்தெடுக்கவேண்டும். இது அட்டவணை உருவாக்கப்படும் நேரத்தைக்குறைக்க (சில ஆங்கில வலைப்பதிகளுக்கு 5-6 ஆண்டுகாலத்துக்கு Archive உள்ளது :))
4. முன்னர் (பல இடுகைகள் அடங்கிய) கிடங்கு பக்கத்துக்கு தான் லிங்க் இருந்தது. இப்போது ஒவ்வொரு இடுகையின் நிரந்தரச்சுட்டியே கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஒரு லிங்க் இருக்கும். இது மிகவும் பயனுள்ள அம்சம். ஒரு குறிப்பிட்ட ஆண்டின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து அதில் உங்களுக்கு பிடித்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்து அந்த பக்கத்துக்கு நேரடியாக செல்லலாம்.
5. உங்கள் டெம்ப்ளேட்டில் சிறு மாற்றம் செய்வதன்மூலம் வலதுபுறத்தில் என் ப்ரொபைலுக்கு கீழே தோன்றுவது போல ஒரு பெட்டி உங்கள் பக்கங்களில் தோன்றச்செய்யலாம். உங்கள் பதிவை படிக்க வருபவர்கள் ஏதேனும் ஒரு ஆண்டை தேர்ந்தெடுத்து எல்லா ஆக்கங்களையும் பார்வையிட இது உதவும்.

நீங்கள் சேர்க்கவேண்டிய நிரல்துண்டு இதுதான் -


<!-- Archive Browser -->
<script language="Javascript"
src="http://anniyalogam.com/scripts/browserbox.php?myblog=<$BlogURL$>">
</script>
<!-- Archive Browser -->

இந்த கருவி எவ்வாறு இயங்குகிறது என்ற ஆவல் உள்ளவர்களுக்கு சுருக்கமான தொழில்நுட்ப ஜிகிடி -
1. முதலில் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் நீங்கள் குறிப்பிடும் ஆண்டுக்கான Archive பக்கங்களை கண்டுபிடிக்கும். ப்ளாக்கர் Archive பக்கங்களுக்கு ஒரே சீரான பெயர்களை வைப்பதால் இது சாத்தியமாகிறது. இதற்கு PHP pattern matching API பயன்படுத்தப்படுகிறது.
2. அடுத்து, ஒவ்வொரு Archive பக்கத்தையும் கீழிறக்கி அதில் உள்ள இடுகைகளை கண்டுபிடித்து அட்டவணை போடும். பெரும்பாலான டெம்ப்ளேட்டுகள் post-title, post-body அல்லது entry-header, entry-body என்ற classகளை பயன்படுவதால் இவ்வாறு செய்யமுடிகிறது. இதற்கு PHP string processing APIs பயன்படுத்தப்படுகிறது.
3. ஒவ்வொரு இடுகைக்கும் அதன் நிரந்தரச்சுட்டியும் காட்டப்படும். நிரந்தரச்சுட்டிகளின் directory structure ஒரே சீராக இருப்பதால் (2006/01, 2005/04 போல) இது சாத்தியமாகிறது.

One-click Notification பற்றி ஒரு அறிவிப்பு

என்னுடைய logfileன்படி நிறைய பேர் இப்போது One-click Notification பயன்படுத்துகின்றனர். இதைப்பற்றி ஆங்கில வலைப்பதிவர்களும் அறிய Blogger Hacks Wikiல் அறிவித்தேன். அதைத்தொடர்ந்து சில ஆங்கில வலைப்பதிவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர். அதில் Ariel Vanderhorst என்பவர் என்னுடைய பட்டன் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று இருப்பதாகக்கூறி அதற்கு பதிலாக கீழ்க்கண்ட image பயன்படுத்துவதாகக் கூறினார்.

முன்பு பொன்ஸூம் இதையே சொன்னதால் பழைய பட்டனுக்கு பதிலாக இந்த படம் தோன்றுமாறு மாற்றிவிட்டேன். நீங்கள் இந்த சேவையை பயன்படுத்துபவராய் இருந்தால் தானாகவே இந்த மாற்றம் நிகழும். உங்கள் டெம்ப்ளேட்டில் எதுவும் செய்யத்தேவையில்லை. இந்த படத்தை க்ளிக் செய்தால் எப்போதும்போல் Notification அனுப்பப்படும். ஏதாவது பிரச்சனை இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.

பி.கு. குமரன், நாகை சிவா போன்ற சிலர் கவனத்துக்கு - நிறைய பின்னூட்டங்கள் உள்ள பக்கம் download ஆகும் நேரம் இந்த சேவையால் கூடுதலாகிறது என்று உங்களுக்கு தோன்றினால், நீங்கள் பழைய வெர்ஷன் பயன்படுத்துபவராய் இருக்கலாம். இதன் பயனர் கையேட்டை மறுபடி ஒருதரம் பார்த்து டெம்ப்ளேட்டில் புது வெர்ஷன் மாற்றங்களை செய்துவிடுங்கள்.

Friday, July 07, 2006

புதிய கருவி - Archive Browser

நீங்கள் துளசியக்காவின் ஆரம்பகால பதிவுகளை படித்திருக்கிறீர்களா? உஷா தொடக்கத்தில் எதைப்பற்றி எழுதினார் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பதிவுகளில் Archives என்று ஒரு பகுதி இருக்குமே. அதை எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறீர்கள்? பழசை கிளறிப்பார்க்கும் ஆர்வம் என்னைப்போல உங்களுக்கும் உண்டா?

நாம் ஒரு வலைப்பதிவுக்கு செல்லும்போது அதில் உள்ள Archives பக்கங்களை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவற்றில் எந்த பக்கங்களில் நமக்கு பிடித்த இடுகைகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க ஒவ்வொரு பக்கமாக போய்ப்பார்க்கவேண்டும். அந்த பக்கங்கள் ஒவ்வொன்றும் கீழிறங்க நேரம் பிடிக்கும். அட போப்பா! ஆனால், அவற்றில் சில முத்துக்கள் மறைந்திருக்க வாய்ப்புண்டு இல்லையா? அவற்றை கண்டுபிடிக்கவும் Archives பக்கங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு முயற்சிதான் Archive Browser.

நீங்கள் ஒரு வலைப்பதிவின் யூ.ஆர்.எல்லை (உங்களுடையதோ இல்லை வேறொருவருடையதோ) இந்த பக்கத்தில் வழங்கினால், அந்த வலைப்பதிவின் எல்லா Archives பக்கங்களையும் ஆராய்ந்து அதில் உள்ள இடுகைகளின் தலைப்புகளையும், இடுகையின் முதல் சில வாக்கியங்களையும் சேகரித்து ஒரு அட்டவணை போட்டு காட்டும். உதாரணத்துக்கு, துளசி அக்காவின் பதிவுக்கு இந்த அட்டவணையை காட்டும். அவர் 2004ல் எழுதிய இடுகைகளில் இருந்து ஆரம்பித்து 2006 வரை ஒருசேர காணலாம். அவற்றில் எந்த இடுகையைப்பார்க்க விரும்புகிறீர்களோ அதற்கு இடதுபுறம் உள்ள சுட்டியை தட்டினால் அந்த Archive பக்கத்துக்கு கொண்டுசெல்லும்.

இனி, இந்த கருவியை பயன்படுத்தி மூழ்கி முத்தெடுப்பது உங்கள் சாமர்த்தியம். கண்டெடுத்த முத்துக்களை மற்றவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். போன வருடத்து முத்துக்கு இப்போது பின்னூட்டம் இட்டால் அந்த வலைப்பதிவரும் ஆனந்தத்தில் திக்குமுக்காடுவார்!!

பி.கு 1 - பெரும்பாலான ப்ளாக்கர் பதிவுகள் இந்த கருவியுடன் ஒத்துப்போகும். சில பழைய டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தும் பதிவுகளுடன் பயன்படுத்தமுடியாது. என்னைப்போல தனியார் டெம்ப்ளேட்டுகளை (courtesy: blogger-templates.blogspot.com) பயன்படுத்துபவர்களின் பதிவுகளுடன் பயன்படுத்தமுடியாது (தற்போதைக்கு).
பி.கு 2 - தொழில்நுட்ப ஜிகிடி அறிந்தவர்களுக்கு - archive பக்கங்களுக்கு feed இல்லாததால் இது html பக்கத்தையே அகழ்வாராய்ச்சி செய்யும் ஒரு ஹேக்தான்.

Thursday, July 06, 2006

கி.பி. 2106: மரணத்தை வெல்லும் மருந்து

(இது தேன்கூடு போட்டிக்கான ஒரு Science Fiction கதை. லாஜிக் எங்கேயாவது உதைத்தால் திருப்பி உதைத்துவிட்டு மேலே படியுங்கள் ;))

ஜான்சனால் ஆவலை அடக்கமுடியவில்லை. நிறைய நேரம் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று யோசித்ததில் தலை வலித்தது. பின்னே, மரணத்தை வெல்லும் மருந்து என்றால் சும்மாவா? ஜான்சன் உலகிலேயே தொழில்நுட்பத்தில் சிறந்த நாடொன்றின் 'வாழ்நாள் நீடிப்பு' ஆராய்ச்சி மையத்தின் தலைவர். சற்றே பருமனான தேகம். முன்வழுக்கை. பின்னாலேயும் நிறைய தலைமுடி என்று சொல்லமுடியாது. தன் எழுபதுகளிலும் சுறுசுறுப்புடன் மனிதனின் வாழ்நாளை நீட்டிப்பது பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியிருப்பவர்.

2080களிலேயே மனிதனுக்கு மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களுக்கெல்லாம் (எய்ட்ஸ் உட்பட) மருந்து கண்டுபிடித்தாயிற்று. அவரது ஆராய்ச்சி மையம் எய்ட்ஸூக்கான மருந்தை கண்டுபிடித்தபோது நாட்டின் அதிபரே நேரில் வந்து கைகுலுக்கினார். தன் மகிழ்ச்சியை அடக்கமுடியாமல் அதிபர் முகமெல்லாம் மலர்ந்தபோது இவருக்கு பெருமை பிடிபடவில்லை. அது மட்டுமா? எல்லா வாகனங்களும் 2070களில் தானியங்கியாக ஆகிவிட்டதால் விபத்துகள் நேர்வதும் முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிட்டது. சாலைகளில் ரோபோக்கள் போல கணினி உதவியுடன் வாகனங்கள் செல்லும்போது விபத்தாவது? மரணமாவது?

ஆனால், இந்த முதுமையால் ஏற்படும் மரணத்தை தான் எதுவும் செய்யமுடியவில்லை. அதிபர் ஒருமுறை கூறியது நினைவுக்கு வந்தது. 'எப்படியாவது முயன்று இதற்கு மருந்து கண்டுபிடித்தீர்களானால், அந்த மருந்தை நம் நாட்டின் தலைசிறந்த தொழில் நிபுணர்கள், அறிவியலாளர்கள் எல்லாருக்கும் வழங்கலாம். அத்தகைய சிறந்த மனிதர்கள் மரணிக்காமல் இருந்தால் நாட்டுக்கு எவ்வளவு நன்மை என்று யோசித்து பாருங்கள்'. ஆனால், ஜான்சனும் உலகிற்சிறந்த ஜீன் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய அவரது குழுவும் எவ்வளவு முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. 'மரணத்தை வெல்லமுடியாது' என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டபோதுதான் அந்த செய்தி வந்தது.


வேற்று நாட்டு 'வாழ்நாள் நீடிப்பு' ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'வெய் வூ' தன்னை சந்திக்க விரும்புவதாக. வூ முதுமையைத் தவிர்க்கும் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததால் ஏன் தன் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அதை தெரிவிக்கிறார் என்ற குழப்பம் வேறு. எல்லாம் இப்போது தெளிவாகிவிடும். முப்பரிமாண ஹோலோகிராம் ப்ரொஜக்டர் தயார் என்று உதவியாளர் தெரிவித்ததும் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தார் ஜான்சன். ஒரு பட்டனை தட்டியதும் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த வூவின் உருவம் சடாரென்று வெளிச்ச துகள்களாக கண்முன்னர் தோன்றியது. தலை மட்டும் இரண்டாக தெரிந்ததும் இந்த ப்ரொஜக்டரை முதலில் மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் ஜான்சன். தாடையை சொறிந்து கொண்டிருந்த வூ முப்பரிமாண தொடர்பு கிடைத்ததை உணர்ந்ததும் விரைவாக கையை எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

'க்வா ஹூ மா ஜூங்' என்றார் வூ. ஒன்றும் புரியாமல் 'என்ன கொடுமை சார் இது' என்று முணுமுணுத்தார் ஜான்சன். தன் உதவியாளரிடம் 'அந்த UTஐ எடுத்து வாப்பா' என்றார் ஜான்சன். UT எனப்படும் Universal Translator ஒரு ஹெல்மெட் போல இருக்கும். எந்த மொழியிலிருந்து எந்த மொழி என்று செட் செய்துவிட்டு அதை தலையில் மாட்டிக்கொண்டால் மொழிமாற்றம் செய்யப்பட்டு காதில் கேட்கும். ஜான்சன் அதை மாட்டிக்கொண்டதும் வூவின் பாஷை புரிந்தது. தன் கண்டுபிடிப்பு எப்படி வேலை செய்யும் என்று விளக்க ஆரம்பித்தார் வூ. மனிதனின் மூளையிலிருந்து ஒரு திரவத்தை எடுத்து அதை என்னென்னவோ செய்து இந்த மருந்தை உருவாக்குவதை DNA செயின்களை கொண்டு விளக்கினார். இந்த மருந்தை ஐந்து பேருக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் கொடுத்ததாகவும், அவர்கள் எல்லாரும் அப்போது எந்த உடல்நிலையில் இருந்தார்களோ இப்போதும் அப்படியே இருப்பதாக (அதாவது எந்த உடல் உறுப்பும் பழுதாகாமல்) கண்கள் விரியக்கூறினார் வூ. அவரது விளக்கத்திலிருந்தே அவர் கூறுவது உண்மைதான் என்று உணர்ந்துவிட்ட ஜான்சன், 'வூ, நீங்கள் இதை உங்கள் நாட்டுக்கு தெரிவித்தீர்களா?' என்று கேட்டார்.


வூ சட்டென 'அதை ஏன் கேட்கிறீர்கள்? எல்லாம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டு சந்தேகப்படுகிறார்கள். என் நாட்டில் எதுவும் வேலைக்காகாது. அதனால் நீங்கள் ஒரு நல்ல தொகையை கொடுத்து என்னை உங்கள் நாட்டு குடிமகனாகவும் ஆக்கிக்கொண்டால், இந்த மருந்தை உங்கள் நாட்டுக்கு விற்றுவிட தயாராக இருக்கிறேன்' என்றார். ஓ.. அப்படி போகிறதா கதை என்று புன்னகைத்தார் ஜான்சன். அவருக்கு உடனே கற்பனை வருங்காலத்தை நோக்கி பறந்தது. வூவை தன் குழுவில் எப்படியாவது சேர்த்துவிட்டால் இந்த மகத்தான செய்தியை அதிபருக்கு தெரிவித்து அவரின் ஏகோபித்த பாராட்டுகளை பெறலாம். 'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் வரலாற்றில் ப்ளாடினம் எழுத்துக்களால் பொறிக்கப்படும். உணர்ச்சிவேகத்தில் காதெல்லாம் ஜிவ்வென்று சிவந்தது. ஆனால், ஏதோ ஒன்று நிரடுவதாக உணர்ந்தார்.

தன் குழுவே அந்த மூளை திரவத்தை வைத்து ஐந்தாண்டுக்கு முன்பு ஆராய்ச்சி செய்ததே.. அப்போது இது சாத்தியமில்லை என்றுதானே விட்டுவிட்டோம். ஆராய்ச்சியில் ஏதாவது தவறு நடந்ததா? சரி, கேட்டுவிடுவோம் என்று முடிவுசெய்து 'வூ, நாங்களும் இதே திரவத்தை இறந்து போனவர்களின் மூளையில் இருந்து எடுத்து முயற்சி செய்தோமே.. எப்படி உங்களுக்கு மட்டும் வேலை செய்கிறது?' என்றார். அதற்கு வூ சொன்ன பதிலில் நாள்பூராவும் இருந்த ஆவல் எல்லாம் அவலாய்ப்போனது. மரணத்தை வெல்வது அவ்வளவு சுலபமல்ல என்பது மறுபடியும் புலனானது. கற்பனைக்கோட்டை எல்லாம் சிதற சலிப்புடன் எழுந்தார் ஜான்சன். வூ சொன்ன பதில் இதுதான்.


'அங்கேதான் ஜான்சன் ஒரு கேட்ச். இறந்தவரின் மூளையிலிருந்து திரவத்தை எடுத்து அவர் இறந்த ஒரு மணி நேரத்துக்குள் மருந்து தயாரித்து உயிர் வாழ்பவருக்கு கொடுத்துவிடவேண்டும். இதில் சேமித்து வைப்பது எல்லாம் நடக்காது. அதாவது, ஒருவர் மரணத்தை வெல்ல இன்னொருவர் மரணத்தை தழுவவேண்டும். ஹி.. ஹி..'