அந்நியலோகம்
About Me
தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)
Wednesday, May 31, 2006
டாப் 10 பிரபல ஒற்றைவரி வசனங்கள்
தொ(ல்)லைக்காட்சியில் ஏதோ பார்த்துகிட்டிருந்தப்போ நம்ம தமிழ் திரைப்படங்கள்ல ரொம்ப பிரபலமான ஒற்றைவரி வசனங்கள் பற்றி யோசிச்சேன். சரி, இதுக்கு ஒரு டாப் 10 லிஸ்ட் போடுவமேன்னு ஆரம்பிச்சேன். எனக்கு தோன்றிய நச் வசனங்கள் இதோ;
1. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே (படம் - திருவிளையாடல்)
2. ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்.. (படம் - பராசக்தி)
3. கிளிக்கு ரெக்கை மொளச்சுடுத்து.. பறந்து போயிடுத்து .. (படம் - கௌரவம்)
4. சந்தைக்கு போணும் ஆத்தா வையும்.. காசு குடு (படம் - 16 வயதினிலே)
5. என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே (படம் - ???)
6. நான் ஒரு தடவே சொன்னா நூறு தடவே சொன்னமாதிரி (படம் - பாட்ஷா)
7. நாட்டாமை.. தீர்ப்பை மாத்திச்சொல்லு (படம் - நாட்டாமை)
8. என் வழி... தனி வழி (படம் - படையப்பா)
9. Figureஐ பாத்தவுடனே friendஐ கட் பண்றான்டா (விவேக்கின் பல படங்கள்)
10. கிளம்பீட்டான்யா.. கிளம்பீட்டான் (வடிவேலுவின் பல படங்கள்)
உங்களுக்கு இதுல எது ரொம்ப பிடிக்கும், ஏன்னு சொல்லிட்டு போங்க. அப்படியே, வேற எதாவது பிரபல வசனங்கள் இருந்தாலும் நினைவுபடுத்திட்டு போங்க.

Monday, May 29, 2006
'மட்டுறுத்தல் நண்பன்' செயலி - மீள்பதிவு
(என் முந்தைய இடுகையை ஏற்கனவே படித்தவர்கள் இந்த இடுகையில் கெட்டியான எழுத்தில் உள்ள வரிகளை மட்டும் படித்துவிட்டு போகவும்.)
நம் தமிழ் வலைப்பதிவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்துக்காக மட்டுறுத்தலை பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது. ஒரு சோதனைக்காக பத்து பதினைந்து ஆங்கில வலைப்பதிவுகளுக்கு சென்று பார்த்தேன். ஒருவரோ இருவரோ தான் மட்டுறுத்தல் பயன்படுத்துகின்றனர். யாரோ சிலபேர் செய்யும் விஷமத்தினால் 500க்கும் மேற்பட்ட தமிழ் பதிவர்களுக்கு முழு சுதந்திரம் இல்லை. இந்த விஷயத்தில் உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலிதான் இந்த 'மட்டுறுத்தல் நண்பன்'.
இந்த செயலி இரண்டுவகை சேவைகளை அளிக்கின்றது.
1. அடிப்படை ஆலோசனை சேவை (Basic suggestion service)
உங்கள் ஜிமெயிலுக்கு மட்டுறுத்தலுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பரிசீலித்து கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு ஆலோசனை அளிப்பது.
- பிரசுரிக்கக்கூடிய பின்னூட்டம் (வெண்பட்டியலோடு பொருந்துபவை. பெரும்பாலான பின்னூட்டங்கள் பொருந்தும்.)
- நிராகரிக்கவேண்டிய போலி பின்னூட்டம் (வெண்பட்டியலோடு பொருந்தாதவை)
- சந்தேகத்துக்குரிய பின்னூட்டம் (சில அநாகரிக வார்த்தைகள் இருந்தால்)
- நீங்களே முடிவெடுக்கவேண்டிய பின்னூட்டம் (வெண்பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், தனிமடல் அல்லது பிரசுரிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தால்)
உங்கள் ஜிமெயிலுக்கு சென்று பின்னூட்டங்களை பார்ப்பதற்கு பதிலாக இந்த செயலியில் ஆலோசனைகளோடு பின்னூட்டங்களை பார்த்து அங்கேயே மட்டுறுத்தலாம்.
இரண்டு முக்கிய குறிப்புகள் -
1. இந்த ஆலோசனை சேவை பயன்படுத்துவதால் எந்த பின்னூட்டமும் தானாக பிரசுரிக்கப்படாது. ஒவ்வொன்றையும் நீங்கள்தான் மட்டுறுத்தவேண்டும்.
2. இதை பயன்படுத்த பலமணிநேரம் ஓடக்கூடிய கணினி தேவையில்லை.
2. மேலதிக சேவை/தன்னியக்க மட்டுறுத்தல் சேவை (Advanced service/ smart moderation service)
மேலே குறிப்பிட்ட ஆலோசனை சேவையை சில நாட்கள் பயன்படுத்தி உங்களுக்கு நம்பிக்கை வந்தபின் இந்த தன்னியக்க மட்டுறுத்தலை பயன்படுத்தி பாருங்கள். இது இரண்டு வகைகளில் உங்களுக்கு உதவும்.
- நிராகரிக்கவேண்டிய அல்லது சந்தேகத்துக்குரிய பின்னூட்டங்களை தானாகவே நிராகரிப்பது (autoreject)
- பிரசுரிக்கக்கூடிய பின்னூட்டங்களை தானாகவே பிரசுரிப்பது (autopublish)
இவைதவிர நீங்களே முடிவெடுக்கவேண்டிய பின்னூட்டங்கள் நீங்கள் மட்டுறுத்துவதற்காக காத்திருக்கும். இவற்றை மட்டும் பார்க்க உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்ள Moderate comments பக்கத்தை பயன்படுத்தலாம் (ஏனென்றால் ஜிமெயிலில் இந்த செயலியால் மட்டுறுத்தப்பட்டவையும் இருக்கும். அவற்றை நீங்கள் பார்க்கத்தேவையில்லை அல்லவா?).
சரி, இனி இந்த செயலியை பயன்படுத்த நீங்கள் செய்யவேண்டியது என்ன என்று பார்ப்போம்.
1. ஒரு புது ஜிமெயில் கணக்கை உருவாக்கி அதை பின்னூட்டங்களுக்காக மட்டும் என்று ஒதுக்கிவிடுங்கள். உங்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே ஜிமெயில் பயன்படுத்துவதால் அதில் உங்களுக்கு நீங்களே அழைப்பு (invite) அனுப்பலாம். அழைப்பை ஏற்று புது கணக்கு உருவாக்குங்கள். ஏற்கனவே மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கை இந்த செயலியுடன் பயன்படுத்தவேண்டாம். உங்களிடம் ஜிமெயில் கணக்கு இல்லையென்றால் எனக்கு தெரிவியுங்கள். நான் அழைப்பு அனுப்புகிறேன்.
2. இந்த புது கணக்கில் Settings->Forwarding and POPக்கு சென்று "Enable POP for all mail" என்பதை தேர்ந்தெடுத்து Save changes பொத்தானை அமுக்குங்கள்.
3. உங்கள் ப்ளாக்கர் கணக்கிற்கு போய் இந்த ஜிமெயில் முகவரியை Comment moderation address ஆக கொடுத்து சேமியுங்கள். இனி உங்கள் பின்னூட்டங்கள் இந்த முகவரிக்கு அனுப்பப்படும்.
4. இனி நீங்கள் எப்போது பின்னூட்டங்களை பார்க்க விரும்பினாலும் http://anniyalogam.ning.com என்ற முகவரிக்கு செல்லுங்கள். உங்கள் புது ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை கொடுங்கள். அடிப்படை சேவையை பயன்படுத்த வேறெதும் மாற்றத்தேவையில்லை. 'பரிசீலனையை தொடங்கு' என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கான ஆலோசனைகள் காண்பிக்கப்படும். அங்கேயே Publish/reject செய்யவும் முடியும். எப்போது வேண்டுமானாலும் 'மீண்டும் பரிசீலிக்க இங்கே சொடுக்கவும்' என்ற சுட்டியை க்ளிக் செய்து புதிதாக வந்துள்ள பின்னூட்டங்களுக்கு ஆலோசனைகள் பெறலாம்.
மேலதிக சேவையை பயன்படுத்த முடிவுசெய்தால், முதலில் ப்ளாக்கருக்கு சென்று Remember me என்பதை தேர்ந்தெடுத்து Login செய்யுங்கள். இப்படி செய்வதால் உங்கள் உலாவி உங்களை நினைவில் வைத்து தன்னியக்கமாக செயல்படும் (நீங்கள் கணினியை அணைத்துவிட்டு மறுபடி ஆன் செய்தால்கூட). இனி, http://anniyalogam.ning.com பக்கத்தில் 'தன்னியக்க நிராகரித்தல் மட்டும்' அல்லது 'தன்னியக்க பிரசுரித்தல் மற்றும் நிராகரித்தல்' என்ற சேவைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து 'பரிசீலனையை தொடங்கு' பொத்தானை அழுத்துங்கள். உங்கள் பின்னூட்டங்கள் (ஏதேனும் இருந்தால்) பரிசீலிக்கப்பட்டு Popup windowவில் மட்டுறுத்தப்படும். இந்த பக்கம் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை தானாகவே மீண்டும் பரிசீலனையை துவக்கும். அதனால் இந்த பக்கத்தை மூடவேண்டாம். உங்களிடம் பல மணிநேரம் ஓடிக்கொண்டிருக்கும் அலுவலக/வீட்டு கணினி இருந்தால், இந்த சேவையை தொடங்கிவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளை கவனிக்கலாம் (அல்லது தூங்கப்போகலாம்).
மேலதிக சேவை குறித்து சில குறிப்புகள் -
1. நீங்கள் Popup windowsகளை disable செய்திருந்தால் http://anniyalogam.ning.comக்கு மட்டும் அனுமதிக்குமாறு மாற்றிக்கொள்ளுங்கள்.
2. உங்கள் உலாவி உங்களை தொடர்ச்சியாக 2 வாரம்தான் நினைவில் வைத்திருக்கும் என்பதால் அதற்குப்பிறகு உலாவி தானாக மட்டுறுத்த முயலும்போது உங்களை Login செய்யுமாறு கேட்கும். நீங்கள் மறுபடி Remember meயுடன் Login செய்தால் மீண்டும் 2 வாரம் நினைவில் வைத்திருக்கும்.
உங்களுக்கு தோன்றக்கூடிய சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ.
1. வெண்பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள்? அவர்களை முழுதும் நம்பலாமா?
தமிழ்மணத்தில் உள்ள பதிவர் பட்டியலில் இருக்கும் 500க்கும் மேற்பட்டவர்கள் இதில் இருக்கிறார்கள். இதில் யாரும் பிரச்சினை செய்ய வாய்ப்பில்லை. அப்படியே செய்தாலும், பின்னூட்டத்தில் உள்ள சில வார்த்தைகளை வைத்து சந்தேகத்துக்குரிய பின்னூட்டங்கள் கண்டுபிடிக்கப்படும். அப்படிப்பட்ட பின்னூட்டம் அனுப்பியவர் யாரென்று எனக்கு தெரிவித்தால் உடனே அந்த நபர் என் வெண்பட்டியலில் இருந்து எடுக்கப்படுவார். தமிழ்மண/தேன்கூடு நிர்வாகிகள் விரும்பினால் அவர்களது வலைவாசலில் இருந்தும் நீக்கிவிடலாம்.
2. அனானிமஸ், அதர் ஆப்ஷன்களுடன் மட்டுறுத்தல் நண்பனை உபயோகிக்கலாமா?
உபயோகிக்கலாம். அந்த பின்னூட்டங்கள் நீங்களே முடிவெடுக்கவேண்டிய பின்னூட்டங்களாக கருதப்படும். தன்னியக்க மட்டுறுத்தலை உபயோகித்தால் அவை பிரசுரிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்படும். ஆனால், அவற்றை அனுப்பியவரின் அடையாளத்தை நீங்களும் எளிதில் சோதனை செய்யமுடியாது என்பதால் இந்த ஆப்ஷன்களை நீக்குவது நல்லது.
3. எனக்கு எதுவும் அநாகரிக பின்னூட்டங்கள் வருவதில்லை. நான் எதற்கு இதை பயன்படுத்தவேண்டும்?
It's just a matter of time. உங்கள் மூலமாக ஒரு நல்ல வலைப்பதிவரின் பெயர் கெடுவதற்கு அனுமதிக்காதீர்கள். குறைந்தபட்சம் ஆலோசனை சேவையையாவது பயன்படுத்துங்கள்.
4. என்னிடம் பல மணிநேரம் ஓடிக்கொண்டிருக்கும் கணினி எதுவும் இல்லை. எனக்கு தன்னியக்க மட்டுறுத்தலால் பயன் என்ன?
இல்லாவிட்டால் பரவாயில்லை. உங்களுக்கு எப்போதெல்லாம் மட்டுறுத்த தோன்றுகிறதோ அப்போதுமட்டும் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, நீங்கள் அநாகரிக பின்னூட்டங்களை பார்த்து பார்த்து சலித்து போயிருந்தால், 'தன்னியக்க நிராகரித்தல் மட்டும்' பயன்படுத்தலாம். இந்த சேவையை உபயோகித்து குப்பைகளை அகற்றிவிட்டு, மற்ற பின்னூட்டங்களை Moderate comments பக்கத்தில் மட்டுறுத்தலாம். 'நான்தான் ஏற்கனவே பில்டர் பயன்படுத்துகிறேனே' என்று சொல்லாதீர்கள். பெயரை மட்டும் வைத்து உருவாக்கப்படும் பில்டருக்கு போலி காசிக்கும் நிஜ காசிக்கும் வித்தியாசம் தெரியாது. இதனால் சில முக்கிய பின்னூட்டங்கள் trashக்கு போக நேரிடலாம்.
விளக்கம் பெரிதாக அமைந்துவிட்டதால் இது கடினமானது என்று நினைக்கவேண்டாம். உபயோகித்து பார்த்தால் மிக சுலபமாக புரியும். உங்களுக்கு வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் இங்கு கேளுங்கள். விவரமாக பதில் தருகிறேன். இந்த செயலியை பயன்படுத்தத் தொடங்கியபின் வலது பக்கத்தில் உள்ள வாக்கெடுப்பில் நீங்கள் எந்த சேவையை பயன்படுத்துகிறீர்கள் என்று வாக்களியுங்கள்.

Sunday, May 21, 2006
வெண்பட்டியல் புதுப்பிக்கப்பட்டது - சில விவரங்கள்
வெண்பட்டியல் என்பது என்னுடைய Identity Checkerக்கும் Smart Moderationக்கும் பயன்படுத்தும் ஒரு பட்டியல். இதில் ப்ளாக்கர் பயன்படுத்தும் பதிவர்கள் பெரும்பாலானோரின் பெயரும் profile எண்ணும் இருக்கும். என் நிரல் ஒவ்வொரு வாரமும் இந்த விவரத்தை சேகரித்துவருகிறது. இன்றைய சேகரிப்பு விவரம் இதோ (ஒவ்வொரு வாரமும் சொல்லமாட்டேன் பயப்படாதீங்க).
ப்ளாக்கர் பயன்படுத்தும் தமிழ்மண பதிவுகள் - 772
அதில் profileஐ பகிர்ந்துகொண்டவை - 601
(பல பதிவுகள் வைத்திருக்கும் பதிவர்கள் இருப்பதால்) Unique (தமிழ்ல என்னாங்க) பதிவர்கள் - 503
இந்த பட்டியலில் இடம்பெறுவதால் இரண்டு நன்மைகள் -
1. Identity Checker பயன்படுத்துபவர்கள் உங்கள் பெயரில் வரும் போலி பின்னூட்டங்களை கண்டுபிடிக்கமுடியும்.
2. Smart Moderation பயன்படுத்துபவர்களின் பதிவுகளில் உங்கள் பெயரில் வரும் போலி பின்னூட்டங்கள் தானாகவே நிராகரிக்கப்படும். (இன்றுமுதல் மாயவரத்தான் பதிவிலும் Smart Moderation பயன்படுத்தப்படுகிறது)
அதனால், நீங்கள் இதுவரை profileஐ பகிர்ந்துகொள்ளவில்லையென்றால் ப்ளாக்கரில் Edit profile செய்து Share my profile என்பதை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு செய்தால் அடுத்தமுறை என் நிரல் ஓடும்போது உங்கள் பெயரும் profile எண்ணும் சேகரிக்கப்படும். இப்போதைக்கு, மாயவரத்தான், ஞானவெட்டியான் இருவரையும் நானே சேர்த்துள்ளேன்.

Saturday, May 20, 2006
வலைப்பதிவுலக மலரும் நினைவுகள் (2003 முதல் இன்று வரை)
ஆச்சரியமா இருக்கு. எனக்கும் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகால தொடர்பு இருந்திருக்கு. செப்டம்பர் 2003ல முதல் பதிவு போட்ட நான் எப்பவாவது ஒரு ரெண்டு பதிவு மட்டுமே போட்டிருந்தாலும், தமிழ் வலைப்பதிவுலகத்துல நடக்கறதையெல்லாம் கவனச்சுக்கிட்டு வந்திருக்கேன். ஆரம்பத்துல பத்து இருபது பேர் எழுதிக்கிட்டு இருந்ததுபோய் இன்னைக்கு தேதியில தமிழ்மணத்துல 800க்கும் மேற்பட்ட பதிவுகள் இருக்கு. அதுல சிலர் நிறைய பதிவுகள் வெச்சிருந்தாலும், என்னோட மென்பொருளின் கணக்குப்படி 500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்துக்குள்ள பதிய ஆரம்பிச்சவர்களுக்கு ஆரம்பகால நிகழ்வுகளை பத்தி தெரியாததுனால, என்னோட நினைவுகளை கிளறி சில சுவாரசியமான விஷயங்களை பத்தி எழுதலாம்னு தோணிச்சு.
முதல்ல தமிழ்ல வலைப்பதிய ஆரம்பிச்சவங்க யூனிகோட் பயன்படுத்தலை. TSCIIங்கற வேற என்கோடிங் உபயோகிச்சதால அவங்களோட பதிவை உலாவில சுலபமா படிக்கமுடியாம இருந்தது. அதனால நாங்க அதுக்காக ஒரு fontஐ நிறுவி படிக்கவேண்டியிருந்தது. அப்புறமாதான் யூனிகோட்ல பதிஞ்சா விண்டோஸ் 2000லயோ XPலயோ சுலபமா படிக்கலாம்னு கண்டுபிடிச்சாங்க. இதுக்கப்புறம்தான் நான் என் பதிவை ஆரம்பிச்சேன். அப்போதெல்லாம் வலைப்பதிவோட யூ. ஆர். எல் தெரிஞ்சாதான் போய் படிக்கமுடியும். யாராவது புது இடுகை போட்டாலும் தெரியாது. அதனால ஒவ்வொரு பதிவா போய் எதாவது புதுசா இருக்கான்னு பாக்கறது. அப்படியே நாம எதாவது புதுசா எழுதியிருந்தா அதுக்கு விளம்பரம் பண்ணிட்டு வரனும். ஒருத்தர் ரெண்டு பேராவது நம்மளோடதை படிக்கனுமே!
மொதல்ல எல்லாரும் சுவாரசியமா விவாதிச்ச விஷயம் என்ன தெரியுமா. blogங்கற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னனுதான். வலைப்பூ-னாரு மாலன் கவித்துவமா. வலைப்பதிவு, வலைக்குறிப்பு இப்படில்லாம் நிறைய பேரு வெச்சாங்க. கருத்துக்கணிப்பெல்லாம் வெச்சி வலைப்பதிவுனு முடிவு செஞ்சாங்கன்னு நினைக்கறேன்.
மதி கந்தசாமி அவர்களுடைய முயற்சியால் Tamil Bloggers List என்ற இந்த பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. புதுசா பதிய வர்றவங்க இந்த பக்கத்துல அவங்க பதிவை அறிவிச்சா அது லிஸ்ட்ல சேர்த்துக்கப்படும். இதுவே எங்களுக்கு பெரிய வரப்பிரசாதமா இருந்துது. அப்புறம் வலைப்பூ சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வலைப்பதிவுலகுல யார் யார் என்னென்ன சுவாரசியமா எழுதியிருக்காங்கன்னு சேகரிச்சு அதைப்பற்றிய விமர்சனத்தோட எல்லாருக்கும் அறிவிப்பார். இதில் ஆறாவது ஆசிரியராக காசி அவர்களுக்கு அடுத்து என்னை நியமித்தார் மதி. நான் வலைப்பூக்களில் நகைச்சுவை/பொழுதுபோக்கு, அறிவியல்/தொழில்நுட்பம் போன்ற சில தலைப்புகளில் எழுதியதை
இங்கே பார்க்கலாம்.
இந்த சஞ்சிகையின் archives படிச்சா அந்தகால (!) வலைப்பதிவுகளைப்பத்தி தெரிஞ்சுக்கலாம். அப்புறம் காசி அவர்கள் தமிழ்மணங்கற அற்புதமான வலைவாசலை அறிவிச்சாரு. அதுல இருந்து வலைப்பதிவுகளோட பொற்காலம் ஆரம்பமாச்சு.
மொதமொதல்ல சொந்தப்பெயர் இல்லாம வலைப்பதிவு ஆரம்பிச்சவர் முகமூடி தான்னு நினைக்கறேன். 'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால முகமூடி போட்டதா அவரோட பதிவின் தலைப்பு சொல்லுது. அடுத்து கண்டிப்பா சொல்லப்படவேண்டியவர் பெயரிலி. இவரோட தமிழ்ப்புலமையைப்பாத்து ஆச்சரியப்படற அதே சமயத்துல இவரோட நீளமான குழப்பறமாதிரியான வாக்கியங்கள பாத்து பயந்துட்டாங்க எல்லாரும். இவரோட அந்தகால பதிவு TSCIIல இருக்கறதால அதுக்குப்பதிலா இந்த யூனிகோட் பதிவை படியுங்க. உதாரணத்துக்கு அதுல இருந்து ஒரு வாக்கியம்... ஆமாங்க சத்தியமா ஒரே வாக்கியம்தான் இவ்ளோ நீளம்.
"இன்னொருவர் பெயரிலே பொய்யாக எழுதுகிறவர், முன்னையவர் பெயருக்குக் கெடுதல் விளைவிப்பதாக இருந்தால், அவரின் கருத்தின் தொனியிலே நிதானமின்மையும் ஆத்திரமேம்படுதலும் அதிக சந்தர்ப்பங்களிலே எண்ணிக்கையிலே அதிகமான பின்னூட்டங்கள் இல்லாமலும், அப்படி இருக்கும்பட்சத்திலே இருப்பின், அவற்றிலே சொன்னதையே சுட்டிக்கொண்டிருக்கும் கிளிப்பிள்ளைத்தனமோ அல்லது முன்னைப்பின்னைக்குத் தொடர்ச்சியின்மையோ இன்றி குறிப்பிட்ட பதிவுக்கான முழங்காலின் தட்டுப்படுதலுக்கு மூளை, முண்ணாண் துடிப்பான பின்னூட்டங்களாகவே இருக்கும்."
இவர் ஒரு சென்சேஷனா இருந்தார் கொஞ்ச காலத்துக்கு. மொதல்ல சிங்கப்பூர்ல இருந்து ஒரு குழந்தைக்குத்தாய்னாரு தன்னைப்பத்தி. அப்புறம் இவர் ஆண்தான்னு கண்டுபிடிச்சாங்க. அடுத்து, மூத்த வலைப்பதிவாளர் சந்திரவதனா அவர்கள். நாமெல்லாம் ஒரு பதிவ வெச்சுக்கிட்டு அதுல எழுதறதுக்கே கஷ்டப்படும்போது இவர் இருபதுக்குமேல பதிவுகள் வெச்சிருக்கார். அவரோட ப்ரொபைல பாத்தீங்கன்னா ஒரு பெரீய்ய்ய லிஸ்ட்டே இருக்கு. (இப்போ குமரன் அவங்களுக்கு போட்டியா வராப்போல தெரியுது).
2004ல் பா.ராகவன், எஸ்.ராமகிருஷ்ணன், மாலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிய வந்தாங்க. ஆனா, அவர்களுக்கு வலைப்பதிவுகளை பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் இருந்தது. பதிவுகளை வலை எழுத்தாளர்கள் அவங்க படைப்புகளை வெளியிடமட்டும் உபயோகிப்பாங்கன்ற கண்ணோட்டத்துல, என்னையும் உங்களையும் போன்ற சாதாரண மனிதர்கள் எழுதறது அவங்களுக்கு பிடிக்கல. பாரா வலைப்பதிவர்களுக்கு போட்ட பத்து கட்டளைகள் ரொம்ப நாளைக்கு பேசப்பட்டது. பாராவின் பதிவை இப்போ எடுத்துட்டாங்க போலிருக்கு. அதனால அவரோட கட்டளைகளை உங்களுக்கு காட்டமுடியல. ஆனா, எஸ்.ராமகிருஷ்ணனோட கருத்துகள் இங்கே இருக்கு. இப்போ இவங்க எல்லாம் வலைப்பதியரதில்லை போலிருக்கு. என்னைப்பொறுத்தவரை வலைப்பதிவுங்கறது எழுத்தாளர்களுக்கு மட்டுமில்ல. அவங்களுக்கு நிறைய வலை சஞ்சிகைகள் இருக்கு. யார் வேண்டுமானாலும் தன் கருத்துகளை டைரி மாதிரி பதிக்கறதுக்குதான் வலைப்பதிவு.
2005ல நடந்த எல்லாருக்கும் தெரிஞ்ச சில விஷயங்கள பத்தி பேச விரும்பாததால இத்தோட முடிச்சுக்கறேன். சரி, கடைசியா பாஸ்டன் பாலாஜியோட இந்த சுவாரசியமான பத்து கட்டளைகளை படிச்சுட்டுப்போங்க.

Thursday, May 18, 2006
தன்னியக்க மட்டுறுத்தல்
(Smart moderation)
உங்கள்ல எத்தனைபேர் மட்டுறுத்தலை விரும்பி செஞ்சிட்டிருக்கீங்க? வேற வழியில்லாம தானே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பார்த்து பார்த்து வெளியிட வேண்டியதாயிருக்கு. நானும் அப்படித்தான். ஆனா மட்டுறுத்தலும் அவசியம் தேவையாயிருக்கே? சரி, இதுக்கு எதாவது பண்ணமுடியுமானு யோசிக்கிட்டு இருந்தப்போ PHP scripting வெச்சு POP3 (Post office protocol) மூலமா மின்னஞ்சல்களை பெற்று ப்ராஸஸ் செய்யமுடியும்னு எங்கயோ படிச்சேன். அட இது சுவாரசியமா இருக்கேனு முயற்சிசெய்யப்போய் இப்போ தன்னியக்க மட்டுறுத்தலை என் வலைப்பதிவுல உபயோகப்படுத்திக்கிட்டு இருக்கேன். என்னோட முந்தைய இடுகைக்கு நீங்க இட்ட பின்னூட்டங்கள்ல பெரும்பாலானவற்றை என் கணிணியே மட்டுறுத்தி வெளியிட்டது. போலி மாயவரத்தான், போலி காசி எல்லாம் வந்து ஆடிட்டு போனாங்க. அதெல்லாம் வெளியிடப்படலை. ஆக, களசோதனை முடிஞ்சாச்சு.
இந்த PHP script மட்டுறுத்தலுக்கு வரும் மின்னஞ்சல்களை என் அஞ்சல்பெட்டியிலிருந்து வாங்கி ஒவ்வொரு மின்னஞ்சலையும் கீழ்க்கண்டவாறு சோதனை செய்து வெளியிடும்.
1. பின்னூட்டியவர் பெயரும் profile எண்ணும் மின்னஞ்சலில் இருக்கவேண்டும்.
2. பின்னூட்டியவர் பெயர் என்னுடைய வெண்பட்டியலில் (whitelist) இருக்கவேண்டும்.
3. பெயரும் profile எண்ணும் வெண்பட்டியலோடு பொருந்தியிருக்கவேண்டும்.
4. "தனிமடல்" போன்ற சில வார்த்தைகள் பின்னூட்டத்தில் இல்லை.
5. பின்னூட்ட நீளம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டவில்லை.
மொத்தத்துல நம்பிக்கைக்குறிய பின்னூட்டங்களை மட்டும் தானாகவே வெளியிடும் (autopublish). என் உலாவியில் என் ப்ளாக்கர் கணக்கை Remember Me option கொண்டு நினைவில் வைத்திருப்பதால், இந்த PHP script வெளியிடவேண்டிய URLஐ உலாவிக்கு கொடுக்கும்போது, உலாவியே அதற்கு தேவையான session cookiesகளை அளித்துவிடும் (புரியலைன்னா விட்ருங்க). பெயரும் profile எண்ணும் வெண்பட்டியலோடு பொருந்தவில்லையென்றால் அந்த போலி பின்னூட்டத்தை தானாகவே நிராகரித்துவிடும் (autoreject). மற்ற பின்னூட்டங்களை மட்டும் என் பார்வைக்கு என் அஞ்சல்பெட்டியில் வைத்திருக்கும். அவை நான் மட்டுறுத்தியபின்பே வெளியிடப்படும்.
சிலருக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலாம். ஆனா, என்னைப்பொறுத்தவரை இதுக்கு ரெண்டு முக்கிய பயன்கள் உண்டு.
1. நான் தூங்கிட்டிருக்கும்போதும் அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருக்கும்போதும் என் வலைப்பதிவு தூங்காது. நான் அமெரிக்காவுல தூங்கிட்டிருக்கும்போது இந்தியால இருந்தும் மற்ற கிழக்கத்திய நாடுகளிலிருந்தும் இடப்படும் பின்னூட்டங்களில் நம்பிக்கைக்குறியவை உடனுக்குடன் வெளியிடப்படும். இதனால் விவாதங்கள் சூடு ஆறாமல் வளரலாம். தமிழ்மணத்தில்அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் உடனுக்குடன் என் இடுகை தோன்றினால் அதைப்பார்த்துவிட்டு மேலும் பலர் பின்னூட்ட வாய்ப்புண்டு (ripple effect போல).
2. எந்த பின்னூட்டத்தை Identity Checkerல சோதனை செய்வது என்று குழம்பத்தேவையில்லை. போலி பின்னூட்டங்கள் தானாகவே கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்படும்.
இந்த காரணங்களால தன்னியக்க மட்டுறுத்தலை தொடர்ந்து பயன்படுத்தலாம்னு இருக்கேன். இதை உங்க பதிவில் பயன்படுத்தனும்னா உங்களிடம் ரெண்டு விஷயம் இருக்கணும்.
1. POP3 அனுமதிக்கர அஞ்சல்பெட்டி. ஜிமெயிலும் இதை அனுமதிக்குது, ஆனா SSL பாதுகாப்பு தேவைப்படுறதுனால என் ஸ்கிரிப்ட்டை ஜிமெயிலோட பயன்படுத்தமுடியாது. நேரம் கிடைக்கும்போது SSLக்கு தேவையானதை செய்ய முயற்சி செய்யறேன். என் ஸ்கிரிப்ட்டை பயன்படுத்த கட்டணம் செலுத்தற யாகூமெயில் இருந்தா போதும்.
2. 24 மணிநேரமும் அணைக்கப்படாத ஒரு PC வேணும். நீங்க 16-18 மணிநேரம் முழிச்சு மட்டுறுத்தறதுக்கு பதிலா (அப்படியும் சிலர் இருக்காங்கனு கேள்விப்பட்டேன்) இந்த கணிணி முழிச்சு இருக்கனும்.
இதெல்லாம் இருந்து Smart moderation வேணும்னா இங்க ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. என்னோட மென்பொருளை பார்சல் பண்ணி அனுப்பறேன்.
பி.கு. நீங்க Comment Identity Checker பற்றிய முந்தைய இடுகையை படிக்கலைன்னா அதையும் படிச்சுட்டு போங்க.

Wednesday, May 17, 2006
Comment Identity Checker Utility
என்னோட இந்த மென்பொருளைப்பற்றி ஒரு சிலருக்கு முன்னமே தெரியும். இப்போ எல்லாருக்கும் சொல்ல முடிவு செஞ்சுட்டேன். உங்களுக்கு வரும் பின்னூட்டத்தை அனுப்பியவரின் அடையாளத்தை சரிபார்க்க இது உதவும். சரிபார்க்காம வெளியிட்டுட்டு அப்புறம் ஒரிஜினல் வலைப்பதிவரிடம் போய் 'நீங்கதான் அந்த பின்னூட்டத்தை அனுப்பினீங்களா'ன்னு கேட்கவேண்டியதில்லை. இதை உபயோகிக்க கீழ்க்கண்ட முகவரிக்கு போங்க.
http://anniyalogam.com/scripts/idchecker.php
சில விஷயங்களை தமிழ்ல விளக்கறது கஷ்டம்கிறதுனால செவ்வாங்கிலத்துலயே (செந்தமிழ்லன்னு சொல்றதில்லையா?) இது எப்படி வேலை செய்யும்னு விளக்கியிருக்கேன். கூடவே, அநாகரிக பின்னூட்டங்கள் உங்க கண்ல படாம குப்பைத்தொட்டிக்கு போகச்செய்வது எப்படின்னும் சொல்லியிருக்கேன். எதாவது சந்தேகம் இருந்தாலோ இல்ல இதுல எதாவது பிரச்சனை இருந்தாலோ எனக்கு rarunach_at_gmail_dot_comக்கு மின்னஞ்சல் அனுப்புங்க..
பி.கு. - இதைவிட அமர்க்களமான ஒரு மென்பொருளைப்பத்தி என்னோட அடுத்த இடுகையில சொல்றேன் ;-()