கீழ்க்கண்ட கேள்விபதில்களை திருவிளையாடலில் நாகேஷ் சிவாஜியை கேட்கும் ஸ்டைலில் படிங்க. (இல்ல நம்ம தருமி சார் கேக்கறமாதிரி வேணா நினைச்சுக்கோங்க.)
"புலவரே, தமிழ் படங்களில் உமது புலமையை சோதிக்கப்போகிறேன்."
"கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?"
"நானே கேட்கிறேன். எனக்கு கேட்கத்தான் தெரியும்."
பார்க்கமுடியாதது?
நல்ல த்ரில்லர்
கேட்கமுடியாதது?
(இரைச்சல் இசையில்) பாடல் வரிகள்
தவிர்க்கமுடியாதது?
(வெளிநாட்டில் நடுரோட்டில்) பாட்டும் ஆட்டமும்
பிரிக்கமுடியாதது?
விவேக்கும் கருத்துசொல்வதும்
சகிக்கமுடியாதது?
வடநாட்டு பாடகர்களின் உச்சரிப்பு
குறைக்கமுடியாதது?
படத்தின் நீளம்
கூட்டமுடியாதது?
கதாநாயகிகளின் உடை
கதைக்கு?
பாலா
உதைக்கு?
விக்ரம்
சிரிப்புக்கு?
லைலா
சிந்தனைக்கு?
விவேக்
உடனடி தேவை?
புதிதாக அரைத்த மாவு.
உம் புலமையே புலமை. வால்க தமிழ், வலர்க சினிமா"
(தமிழ்மணம் எல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அந்த காலத்துல.. ஹிஹி...நவம்பர் 2003ல... நான் இந்த வலைப்பதிவுல போட்ட பதிவு இது. புதுசா அரைச்ச மாவு இல்லாததாலும் எக்கச்சக்கமான புது வலைப்பதிவர்கள் ஆவலோடு படிக்க காத்திருப்பதாலும்(!) இதற்கு மறுபதிப்பு ஆகும் பெருமை அளிக்கிறேன்)