Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Friday, November 12, 2004

"மத"த்தலைவர்

இந்து மதமே!
உனக்கு இந்த நிலை தேவைதானா?
ஆண்டாண்டுகாலமாக அமைதிக்கு வழிகாட்டிய நீ இன்று
அரசியலிடமும் ஐம்புலன்களை அடக்கத்தெரியாத ஆன்மீகவாதிகளிடமும் அகப்பட்டு அவஸ்தைப்படுகிறாய்.
ஜிஹாத் தீவிரவாதிகள் பின்பற்றிய குர்ஆனின் உள் அர்த்தங்கள்
ஆசாரியர் பின்பற்றிய கீதையிலும் உண்டா?

நகரேஷு காஞ்சியே!
உனக்கு இந்த நிலை தேவைதானா?
நான் பிறந்த புண்ணியநகரத்தில்
நான் வணங்கிய வரதராஜ பெருமாளின் முன்னிலையில்
ஊருக்கு நன்மை புகட்டும் தீயவரின் வெறித்தாண்டவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் சேர்க்க புது மார்க்கம் கொலையா?

இனி தீபாவளியன்று அதிகாலை டிவியில்
அறிவுரை சொல்லுபவரை குழந்தைகள் பார்க்கப்போவது
பக்தியுடனா? பயத்துடனா?
மரியாதையோடா? கேலியோடா?

(இது புதுக்கவிதை அல்ல)

Tuesday, November 02, 2004

தேர்தல் - கெர்ரிக்குத்தேவை ஓஹியோவும் பென்சில்வேனியாவும்

இப்போதைய CNNன் projectionஐ வைத்தும், www.electoral-vote.comன் முந்தைய கணிப்புகளை வைத்தும் ஒரு கணக்கு போட்டேன். (வேற வேலை என்ன?).

Current electoral votes projection - Bush : 170, Kerry - 112
Expected other electoral votes - Bush : 46, Kerry - 127 (if he wins california (55), Florida (27) and michigan (17))
Total - Bush: 216, Kerry: 239
Neck-to-neck competition for remaining electoral votes (Ohio, Pennysylvania, Iowa, Wisconsin etc).

இதை வைத்து பார்த்தால் கெர்ரி இன்னும் 31 ஓட்டுக்களை மேற்கண்ட மாநிலங்களிலிருந்து பெற்றுவிட்டால் அவர்தான் அதிபர். ஓஹியோவும் பென்சில்வேனியாவும் கெர்ரிக்கு கிடைத்தால் போதும்.

அமெரிக்க தேர்தல் - சூடான முடிவுகள்

CNNன் அமர்க்களமான தேர்தல் கவரேஜ் ஆரம்பித்துவிட்டது. CNBCல் பங்கு மார்க்கெட் நிலவரத்தை காண்பிக்க உபயோகிக்கப்படும் பிரம்மாண்ட திரைகளில் தேர்தல் ஓட்டு நிலவரத்தை சூட்டோடு சூடாக காண்பிக்கப்போகிறார்களாம். CNNஐ சேர்ந்த Larry king, Bill shnyder போன்ற கிழடுகள் எல்லாரையும் ஓரே இடத்தில் வைத்து பார்ப்பது அதிசயமாக உள்ளது. இவர்களில் நிறைய பேருக்கு இன்றிரவு சிவராத்திரிதான். 1968க்கு பின் அதிகபட்ச வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. P.K.சிவகுமார் தனது வலைப்பதிவில் (http://pksivakumar.blogspot.com) ஆர்வமுடன் முடிவுகளை கவனித்துக்கொண்டிருக்கிறார். முதலில் வெளிவரும் மாநிலங்களின் Exit poll முடிவுகள் புஷ்ஷுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

நம்முடைய வாக்கெடுப்பில் (!) கெர்ரி 80% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். நீங்கள் இன்னும் வாக்களிக்கவில்லையெனில் வலதுபுறம் உள்ள வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுங்கள்.

அமெரிக்க தேர்தல் - உங்கள் ஓட்டு யாருக்கு?

நம் தமிழ் வலைப்பதிவர்களிடையே அமெரிக்க அதிபர் தேர்தலைப்பற்றி ஒரு வாக்கெடுப்பு எடுக்கலாம் என்று தோன்றியது. வலைப்பதிவரே, நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வலதுபுறத்தில் உள்ள வாக்கெடுப்பில் பங்குகொள்ளலாம். அமெரிக்காவில் இருந்தும் ஓட்டுரிமை இல்லையா? இங்கு தெரிவியுங்கள் உங்கள் தேர்வை. உங்கள் தேர்வுக்கான காரணத்தை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

அமெரிக்கத் தேர்தல் - மேலும் சில விளக்கங்கள்

என் முந்தைய பதிவுக்கு ஒரு பெயர் வெளியிடாதவரிடமிருந்து ஆங்கிலத்தில் பின்னூட்டம் வந்திருந்தது. அதற்கு விவரமான பதில் அளிக்கவேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

"You have raised some valid points. But the proponents for the current system will have arguments too. Here I am playing devil's advocate.

1. This is United states of America. That means, each state is like a separate country. They elect their electoral votes, so within that state, it is true democracy. (Even in india an MP can win an election by one vote. We don't give silver medal, if you will, to the loser)"

ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு மாதிரிங்கறதை நானும் ஒத்துக்கறேன். ஆனா இராக் மேல போர் தொடுக்கனுமா வேண்டாமா என்பது போன்ற முக்கியமான முடிவுகளை எல்லாம் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாவா எடுக்குது? நம்ம ஊரு பார்லிமெண்ட் தேர்தலுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்குங்க. ஒரு MP ஒரு ஓட்டு வித்தியாசத்துல வெற்றிபெற்றால் அவரோட கட்சிக்கு ஒரு சீட்டுதான் கிடைக்கும். ஆனா, இங்க Florida போன்ற மாநிலங்கள்ல புஷ் ஒரே ஒரு ஓட்டு கூடுதலா பெற்றால்கூட அவருக்கு அந்த மாநிலத்தோட எல்லா electoral voteகளும் கிடைச்சிடும். இப்படி இல்லாம இந்தியா மாதிரி Florida-வோட ஒவ்வொரு congressional districtக்கும் தனித்தனியா வெற்றிபெற்றவரை முடிவு செஞ்சிருந்தா, 2000மாம் ஆண்டு தேர்தல்ல அல் கோர் தான் வெற்றி பெற்றிருப்பார். இன்னிக்கு இராக் வெளிநாட்டவர்களின் தலைக்கு வேட்டு வைக்கும் ரணகளமா மாறியிருக்காது. நாடுமுழுவதும் கெர்ரிக்கு ஓட்டு போட்டவங்களுக்கும் புஷ்ஷுக்கு ஓட்டு போட்டவங்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரொம்ப குறைவா இருந்தாலும், கெர்ரிக்கு ஓட்டு போட்டவங்க நிறைய மாநிலங்கள்ல பரவலா இருந்தா, பெரும்பாலான மாநிலங்கள்ல கெர்ரிக்கு ஒரு electoral vote கூட கிடைக்காமலேயே போக சான்ஸ் இருக்கு. இதன்மூலம் புஷ் ஏகப்பட்ட electoral vote வித்தியாசத்துல் வெற்றிபெற்றதா பொய்யான ஒரு பெருமையை அடையலாம். இது மக்கள் தீர்ப்பை நிச்சயமா பிரதிபலிக்கலைன்னுதான் நான் சொல்லுவேன்.

"2. If it is a true head count throught USA, candidates will ignore small states like Wisconsin or Florida. Instead they will concentrate more in CA, NY, etc."

இது உண்மைதான். ஆனா, இப்ப இருக்கற population to electoral vote ratio படி பார்த்தால், wyomingல இருக்கற ஒருத்தர் போடற ஓட்டு californiaல இருக்கற நாலு பேர் போடற ஓட்டுக்கு சமம். நியாயமா பார்த்தா கலிபோர்னியால தான் நிறைய படிச்ச, தெளிவானவங்க இருக்கறதா சொல்லலாம். ஆனா இந்த முறையால, வேறசில முக்கியமில்லாத மாநிலங்கள் அமெரிக்காவின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கப்போகிறவரை தேர்ந்தெடுப்பதில் அதிக பங்கு வகிக்கின்றன. Tennenbaum இதுக்கு சொல்ற தீர்வு - பெரிய மாநிலங்களின் electoral vote எண்ணிக்கையை அவற்றின் மக்கள் தொகைக்கேற்ப கூட்டுவது.

காசி எனக்கு ஓட்டுரிமை உண்டான்னு கேட்டிருந்தார். இல்லை காசி, நான் இன்னும் நிரந்தரமற்ற பணியாளனாக தான் இருக்கிறேன். ஆனாலும், Tennenbaum அவர்களே தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதால் எனக்கும் இந்த numbers gameல் நாட்டம் வந்தது. இன்றைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாததாலும் நிறைய sick days சேர்ந்துவிட்டதாலும்(!) இன்றைக்கு ஆபீஸுக்கு மட்டம் அடித்துவிட்டு CNNல் மூழ்கிவிட்டேன். இன்னும் சில பதிவுகள் போட்டு உங்களையெல்லாம் வாட்டவும் ப்ளான் இருக்கிறது :)

Monday, November 01, 2004

அமெரிக்கத் தேர்தல் - சில கேள்விக்குறிய விஷயங்கள்

அமெரிக்க அரசியலமைப்பில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் உள்ள சில விவகாரமான விஷயங்களைப்பற்றி இங்கு விவரிக்கப்போகிறேன். இங்கு அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெறும் மொத்த வாக்குகளை வைத்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்குப்பதிலாக, ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட சிலரை தேர்வாளர்களாக (electors) நியமிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கு எத்தனை காங்கிரஸ் (நம்ம ஊரு மாதிரி காங்கிரஸ் ஒரு கட்சின்னு நினைச்சுக்காதீங்க. Senate + House = Congress) பிரதிநிதிகள் இருக்கின்றனரோ அத்தனை தேர்வாளர்கள் வழங்கப்படும். ஒரு மாநிலத்துக்கு குறைந்தபட்சம் 3 தேர்வாளர்கள். அந்தந்த மாநிலங்கள் தமது தேர்வாளர்களை தாமே நியமிக்கலாம். பொதுவாக, இரண்டு அதிபர் வேட்பாளர்களும் தத்தமக்கென்று வேண்டிய தேர்வாளர்களை நியமிப்பார்கள் எனப்படுகிறது (அதாவது, 25 தேர்வாளர்கள் கொண்ட மாநிலத்துக்கு, புஷ் 25 பேரையும் கெர்ரி இன்னொரு 25 பேரையும் நியமிப்பர்). இந்த தேர்தலில் எல்லா மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 538 தேர்வாளர்கள் வெற்றிபெறுவர். நாளைய தேர்தலுக்குப்பின் டிசம்பரில் அவர்கள் கூடி அதிபரை தேர்ந்தெடுப்பர். அவர்களில் 270க்கு மேலானோர் யாரை அதிபராக தேர்ந்தெடுக்கின்றனரோ அவர்தான் இந்த நாட்டின் தலைவிதியை (ஒரு விதத்தில் பார்த்தால் உலகத்தின் தலைவிதியையும்) அடுத்த நான்கு வருடங்களுக்கு முடிவு செய்யப்போகிறவர்.

இந்த வழக்கத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 2000ம் ஆண்டு தேர்தலில் புஷ் வெற்றிபெற்றதற்கு இந்த வழக்கம்தான் காரணம். கோர் ஒட்டுமொத்த ஓட்டுக்களில் 500,000 ஓட்டுக்களுக்கும் மேலாக முதன்மையில் இருந்தபோதிலும், ப்ளோரிடாவில் புஷ் வெறும் 537 ஓட்டுக்கள் முதன்மையில் இருந்ததினால் அம்மாநிலத்திற்கான 25 தேர்வாளர் ஓட்டுக்களையும் பெற்று அதிகபட்ச தேர்வாளர் ஓட்டுக்கள் பெற்ற அதிபராக வெற்றிபெற்றார்.

18வது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த விதி இன்றைய தேதிக்கு பொருந்துமா என்பது மிகப்பெரிய கேள்வியே. இந்த முறைமை வகுக்கப்பட்டபோது பொதுஜனங்கள் அவ்வளவாக அரசியல் ஞானம் இல்லாதவர்களாக கருதப்பட்டதால், அரசியல் பற்றி நன்கு அறிந்த கட்சி சார்பற்றவர்கள் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இவர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும், அன்றைய தேதியில் எல்லா மாநிலங்களையும் ஒரே அரசியலமைப்புக்கு ஒத்துக்கொள்ள வைப்பதற்காக, குறைந்த மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கும் மூன்று தேர்வாளர்கள் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் அவர்களுக்கும் தேர்தலில் அதிக Power கொடுக்கப்பட்டது எனலாம். ஆனால் போகப்போக மக்கள் தொகை வளர்ச்சியால், வாக்காளர்-தேர்வாளர் விகிதம் இந்த சிறிய மாநிலங்களில் குறைவாகவும், கலிபோர்னியா போன்ற பெரிய மாநிலங்களில் அதிகமாகவும் உள்ளது. (voter-elector ratio: california - 600,000, wyoming - 165,000). சிறிய மாநிலங்களுக்கு பிரச்சாரங்களில் தேவைக்கு மேலான முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இதனால்தான்.

இன்னொரு விசித்திரம் என்னவென்றால், Florida போன்ற மாநிலங்களில் புஷ் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முதன்மையில் இருந்தாலும் அவருக்கு அனைத்து தேர்வாளர்களின் ஓட்டுக்களும் கிடைத்துவிடும் (winner takes all). இது என்ன முட்டாள்தனம்? விளையாட்டில் கூட gold, silver, bronze என்று உண்டே!! நிறைய மாநிலங்களில் இந்த winner takes all வழக்கமே இருந்தபோதும் ஒருசில மாநிலங்களில் மட்டும் ஓட்டுகளுக்கு Proportionate ஆக தேர்வாளர்களை இரு கட்சிகளுக்கும் பிரித்து வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்போகிறார்கள். இந்தமாதிரி ஒவ்வொரு மாநிலமும் தத்தமது இஷ்டத்துக்கு சட்டம் அமைப்பது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. சரியாக எழுதப்படாத Standards document போல அரசியலமைப்பு இந்த விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே விதியை விதிக்காமல் வழவழா என்று இருப்பதாக எனக்குப்படுகிறது. மற்றொரு வேடிக்கை என்னவென்றால் இந்த தேர்வாளர்கள் சிலசமயம் ஓட்டே போடாமல் ஒதுங்கிக்கொள்வார்கள். மேலும், துட்டு வாங்கிக்கொண்டு எதிரணிக்கு ஓட்டளிப்பதாகவும் பேசப்படுகிறது.(அங்கேயுமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது :)).

எல்லாரையும் ஓட்டுபோடுங்க, ஓட்டுபோடுங்க என்று பிரச்சாரம் செய்துவிட்டு, கடைசியில், பொதுமக்கள் போடும் ஓட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இவ்வளவு விவகாரமான முறையில் அதிபரை தேர்ந்தெடுப்பது எந்தவிதத்தில் ஜனநாயகம்டா சாமி. www.electoral-vote.com என்ற தளத்தில் இந்த முறையின்படி யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது (இப்போதைக்கு முதன்மையில் கெர்ரி). இந்த தளத்தின் votemaster யார் என்று தெரியுமா? Andrew Tennenbaum.. என்ன எங்கேயோ கேட்ட பேரா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? அட ஆமாங்க.. நம்ம computer networks மற்றும் பல கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியவர்தான். சாருக்கு அரசியல்ல அவ்வளவு ஆர்வமாம்.