ரெடி ஜுட்...
கொஞ்சநாளு மத்தவங்க பூவையெல்லாம் எப்பவாச்சும் மேஞ்சிகிட்டு இருக்கையில என்னடான்னா வலைப்பூ உலகம் கன்னாபின்னான்னு வளர்ந்து ஒரு ரேஞ்சா போயிட்டுருக்கு சாமியோவ்! நான் ஆரூடம் சொன்னாப்போலவே எக்கச்சக்கமா புது ஆளுங்க புகுந்து கலக்கிட்டாய்ங்க! நிச்சயமா வெங்கட் முயற்சி பண்றமாதிரி எல்லா வலைப்பூல இருந்து பதிவுகள தொகுத்து காட்டற ஒரு வலைப்பக்கம் வேனும். இத மாதிரி ஒண்ணு பண்லாம்னு ஆரம்பிச்சப்பதான் ஆபீஸ் வேலை, மத்த பொறுப்புகள் எல்லாம் ஜாஸ்தியாயிருச்சி. என்ன செய்ய..
கண்ணியமா எழுதிட்டிருந்தவங்க காலம்போய் கண்டதையும் எழுதறவங்களுக்கும் காலம் இப்போ. அதுக்காக நான் வலைப்பூல என்னாத்த எழுதனும்னு எல்லாம் லெக்சர் கொடுக்கப்போறதில்ல. அது அவங்கவங்க இஷ்டம். என்னை மாதிரி புனைபேரோட (பேரே இல்லைன்னா இன்னும் பெட்டர்) நாலஞ்சு பேர் கிளம்பிட்டாய்ங்க. என் பதிவுகள நெசமாலுமே நாலு பேரு படிக்கனும்னா அவங்கள மாதிரி நானும் கிண்டலடிச்சு எழுதனுமோ என்னவோ!! காமெடிங்கற பேர்ல முகம் தெரியாதவங்கள கிண்டலடிக்கறதெல்லாம் நமக்கு ஒத்து வராதப்பா. நான் நல்லபுள்ளயா எதாவது எழுத ஆரம்பிக்கறேன். பார்ப்பம்....