அம்ம்ம்ம்ம்ம்ம்மா!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்து அராஜகம் செய்துகொண்டிருக்கும் அந்த படித்த முட்டாளை என்ன சொல்வது? அதாங்க, அம்ம்ம்ம்ம்ம்ம்மா! முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களின் விடுதிகளை இடித்து தள்ளிவிட்டு அங்கு தன் கனவு செக்ரடேரியட் கட்டப்படும் என்கிறார். மாணவர்கள் பரிட்சை முடிந்தவுடன் மொகப்பேருக்கு துரத்தப்படுவர். அங்கு Housing Board வீடுகளிலோ வேறெதிலோ தங்கவைக்கப்படுவர். ஜெயலலிதாவுக்கு அப்படியொன்றும் செக்ரடேரியட்டில் பணிபுரிவோரின்மேல் ஆசை பொத்துக்கொண்டு அவர்கள் நலனுக்காக இதைக்கட்டுவதாக ஒன்றும் சொல்லமுடியாது. கொஞ்ச நாள் முன்னர் அவர்களின் பணிநிறுத்தத்தின்போது எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டார் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஏதோ ஒரு மட ஜோசியன் எதையாவது உளறியிருப்பான். அவ்வளவுதான். எது எப்படியோ, ஏற்கனவே சென்னைக்கு புதிதாக படிக்கவந்து கஷ்டப்படும் இளம் மாணவர்களுக்கு தினம்தினம் இனிமேல் ஒன்றரைமணிநேரம் விடுதியிலிருந்து கல்லூரிக்கு பயணம். அப்படியென்ன தமிழக அரசுக்கு கட்டிடம் கட்ட கல்லூரிகளையும் பள்ளிகளையும் தவிர வேறு இடமே கிடைக்கவில்லையா என்ன?





