Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Monday, October 27, 2003

சிலந்தி விழித்துக்கொண்டது

வலைப்பூ சஞ்சிகையில் என்னுடைய வலைப்பூவை பிடித்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தெரியும்.. நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று. ஆம்.. நான் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வலை பின்னவேண்டும். என்ன செய்வது.. நேரமின்மை. ஆனால், நாளைமுதல் நான் அமெரிக்காவில் கண்டு ரசித்த அருமையான சில இடங்களைப்பற்றி எழுதப்போகிறேன். நாளை திரும்பி வாருங்கள்.

Tuesday, October 07, 2003

இயந்திர கவர்னர்

கலிபோர்னியாவின் கவர்னர் பாதி மனிதன், பாதி இயந்திரம்!! எந்த தீய சக்தியையும் அழிக்கவல்லவர். என்ன, ரொம்ப குழப்பிவிட்டேனா? ஆம், அவர்தான் அர்னால்ட் ஷ்வார்சினெக்கர். தேர்தலில் நின்று ஜெயிக்கும் தருவாயில் உள்ளார். கலிபோர்னியா இந்தியாவின் இன்னொரு மாநிலம் என்று விளையாட்டாக சொல்லிக்கொண்டிருந்தோம் இல்லையா? கிட்டத்தட்ட அதேமாதிரி ஆகிக்கொண்டு வருகிறது. ஒரு சினிமா நடிகர் கவர்னர் ஆகிவிட்டார். நம்மூர் மாதிரி ஒப்புக்குச்சப்பாணி பதவி அல்ல இது. கவர்னர் இங்கு சி.எம். மாதிரி. இந்த தேர்தலில் இன்னும் சில சிறப்பம்சங்கள் உண்டு. மொத்தம் 134 பேர் போட்டியிட்டனர். எதோ பியூன் வேலைக்கு ஆள் எடுப்பதுபோல் கண்டவர்களும் போட்டியிட்டனர். ஒரு காமெடி நடிகர், ஒரு மென்பொருள் வல்லுநர் அட ஏங்க... ஒருமாதிரி படங்கள்ல நடிக்கற ஒரு அம்மணிகூடத்தாங்க (3500 வோட்டு வேறு வாங்கியிருக்கிறார்)!! சகட்டுமேனிக்கு எல்லாரும் கலந்துகொள்ள இது ஒரு கலக்கல் தேர்தல் ஆகிவிட்டது. இது ஒரு திரும்பப்பெறும் தேர்தல் வேறு - கவர்னர் ஆட்சி சரியில்லை என்று மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டதால் அவரை நாற்காலியிலிருந்து கீழே இறக்கிவிட்டனர். "Judgement Day"ல் நடித்த அர்னால்டுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லிவிட்டனர். எங்க ஊர் கவர்னரின் பலத்துக்கு ஈடு இணை இல்லை என்று நான் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் :)