Send As SMS
My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Sunday, August 13, 2006

நான் ஏன் Haloscanக்கு மாறினேன்?

ப்ளாக்கர் தன்னுடைய பின்னூட்ட வசதியை ஆரம்பிப்பதற்கு முன்னிருந்தே Haloscan பின்னூட்ட வசதி இருந்துவருகிறது. ப்ளாக்கரின் சேவை தொடங்கியபோது அதில் எனக்கு பிடித்த அம்சங்கள் -

1. யூனிகோட்டில் பின்னூட்டமிட முடிவது.
2. பெரிய பின்னூட்டங்களை அனுமதித்தது
3. பின்னூட்ட மட்டுறுத்தல்

இவை அனைத்தும் Haloscan வசதியிலும் இருப்பதை நேற்று அறிந்துகொண்டேன். கூடுதலாக இன்னுமொரு சிறப்பான வசதியும் இருக்கிறது. அது, நாம் தேர்ந்தெடுக்கும் சில ஐபி முகவரிகளில் இருந்து பின்னூட்டங்களை அனுமதிக்காமல் தடை செய்வது. ப்ளாக்கர் பின்னூட்ட வசதியில் இருக்கும் ஓட்டைகள் ஏற்கனவே பிடிக்காமல் இருந்ததால், அதை மொத்தமாக நிறுத்திவிட்டு ஹேலோஸ்கேன் சேவைக்கு மாறியுள்ளேன். 69.50.208.4 (igloohost.com, glendale, arizona) என்ற ஐபி முகவரியையும் தடை செய்துவிட்டேன். ஏன் என்று கேட்கிறீர்களா? 'இந்த முகவரியை தடை செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.' என்று பட்சி சொல்கிறது ;). இதைத்தவிர, அநாகரிக பின்னூட்டங்கள் அனுப்பப்படும் ஐபி முகவரிகளை மட்டுமே தடை செய்ய நினைத்துள்ளேன். என்னைப்பற்றி நன்கு அறிந்த பெரும்பாலான பதிவர்கள் இதை தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இனி என் பதிவில் இருந்தபடியே பின்னூட்டமிடலாம். ப்ளாக்கர் பக்கத்துக்கு போகத்தேவையில்லை (ப்ளாக்கரில் லாகின் கூட செய்யத்தேவையில்லை). View/Post comments என்ற வரிக்கு கீழே உள்ள பெட்டியில் மற்றவர் பின்னூட்டங்களும், நீங்கள் பின்னூட்டமிட வசதியும் தோன்றும். Name, email, URL ஆகியவற்றை கேட்கும். பெயரை மட்டும் கொடுங்கள், மற்றவை தேவையில்லை. பின்னூட்டம் இட்டதும் அதே பெட்டியில் 'Comment Successfully Posted. Your comment is awaiting moderation' என்ற அறிவிப்பு தோன்றும். நான் மட்டுறுத்தியவுடன் பின்னூட்டம் வெளியிடப்படும்.

இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் rarunach[AT]gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும். Thanks for your understanding.


Post a comment (No need to give Email/URL)
comments so far.



<< Home