Archive Browser Showcase - Do not miss it!
பத்ரி, காசி, பாஸ்டன் பாலாஜி, இகாரஸ் பிரகாஷ், சந்திரவதனா, மதி, சுவடு ஷங்கர், துளசி, மாயவரத்தான், டுபுக்கு, உஷா, குழலி. இது என்ன லிஸ்ட்னு கேக்கறீங்களா? இவர்களுடைய 2003, 2004, 2005ம் ஆண்டு ஆக்கங்களை Archive Browserல் திரட்டி அதை Showcase போல ஒரு பக்கத்தில் காட்டியுள்ளேன். இவற்றை பார்க்க நீங்கள் செல்லவேண்டிய பக்கம் - http://www.anniyalogam.com/showcase/showcase.html
சும்மா ஒரு முன்னோட்டம் இதோ.

என் நிரலை பலவிதமான டெம்ப்ளேட்டுகளுடன் ஒத்துப்போக வைப்பதற்காக இவர்களது பதிவுகளை தேர்ந்தெடுத்திருந்தேன். இப்படி Archive Browser உருவாக்கும் அட்டவணைகளை சேமித்துவைத்து இதன் பயன்பாட்டை காண்பிக்கலாமே என்று தோன்றியது.
இந்த கருவியை கடந்த வெள்ளியன்று இதை அறிவித்தபின் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன்.
1. blogger-templates.blogspot.com அளிக்கும் டெம்ப்ளேட்டுகளுடனும் பயன்படுத்தமுடியும். ப்ளாக்கரின் பழைய டெம்ப்ளேட்டுகளுடனும் மற்றும் சில third party வலைத்தளங்கள் அளிக்கும் டெம்ப்ளேட்டுகளுடனும் பயன்படுத்தலாம். ஆனால், இடுகைத்தலைப்பு காட்டப்படாது. பத்ரியின் வலைப்பதிவு ஒரு எடுத்துக்காட்டு.
2. இந்த கருவியை ஆங்கில வலைப்பதிவர்களுக்கும் அறிவிக்கப்போவதால் இடைமுகம் முற்றிலும் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
3. வலைப்பதிவின் யூ.ஆர்.எல்லை கொடுப்பது மட்டுமில்லாமல் கூட ஒரு ஆண்டையும் தேர்ந்தெடுக்கவேண்டும். இது அட்டவணை உருவாக்கப்படும் நேரத்தைக்குறைக்க (சில ஆங்கில வலைப்பதிகளுக்கு 5-6 ஆண்டுகாலத்துக்கு Archive உள்ளது :))
4. முன்னர் (பல இடுகைகள் அடங்கிய) கிடங்கு பக்கத்துக்கு தான் லிங்க் இருந்தது. இப்போது ஒவ்வொரு இடுகையின் நிரந்தரச்சுட்டியே கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஒரு லிங்க் இருக்கும். இது மிகவும் பயனுள்ள அம்சம். ஒரு குறிப்பிட்ட ஆண்டின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து அதில் உங்களுக்கு பிடித்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்து அந்த பக்கத்துக்கு நேரடியாக செல்லலாம்.
5. உங்கள் டெம்ப்ளேட்டில் சிறு மாற்றம் செய்வதன்மூலம் வலதுபுறத்தில் என் ப்ரொபைலுக்கு கீழே தோன்றுவது போல ஒரு பெட்டி உங்கள் பக்கங்களில் தோன்றச்செய்யலாம். உங்கள் பதிவை படிக்க வருபவர்கள் ஏதேனும் ஒரு ஆண்டை தேர்ந்தெடுத்து எல்லா ஆக்கங்களையும் பார்வையிட இது உதவும்.
நீங்கள் சேர்க்கவேண்டிய நிரல்துண்டு இதுதான் -
<!-- Archive Browser -->
<script language="Javascript"
src="http://anniyalogam.com/scripts/browserbox.php?myblog=<$BlogURL$>">
</script>
<!-- Archive Browser -->
இந்த கருவி எவ்வாறு இயங்குகிறது என்ற ஆவல் உள்ளவர்களுக்கு சுருக்கமான தொழில்நுட்ப ஜிகிடி -
1. முதலில் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் நீங்கள் குறிப்பிடும் ஆண்டுக்கான Archive பக்கங்களை கண்டுபிடிக்கும். ப்ளாக்கர் Archive பக்கங்களுக்கு ஒரே சீரான பெயர்களை வைப்பதால் இது சாத்தியமாகிறது. இதற்கு PHP pattern matching API பயன்படுத்தப்படுகிறது.
2. அடுத்து, ஒவ்வொரு Archive பக்கத்தையும் கீழிறக்கி அதில் உள்ள இடுகைகளை கண்டுபிடித்து அட்டவணை போடும். பெரும்பாலான டெம்ப்ளேட்டுகள் post-title, post-body அல்லது entry-header, entry-body என்ற classகளை பயன்படுவதால் இவ்வாறு செய்யமுடிகிறது. இதற்கு PHP string processing APIs பயன்படுத்தப்படுகிறது.
3. ஒவ்வொரு இடுகைக்கும் அதன் நிரந்தரச்சுட்டியும் காட்டப்படும். நிரந்தரச்சுட்டிகளின் directory structure ஒரே சீராக இருப்பதால் (2006/01, 2005/04 போல) இது சாத்தியமாகிறது.


comments so far.
<< Home