ப்ளாக்கரின் புதிய வசதிகள் - அமர்க்களம்!
இதைப்பற்றிய செய்தியை படித்தவுடன் கை அரிக்க ஆரம்பித்ததால் ஒரு புதிய சோதனை பதிவை உருவாக்கினேன். அதை இந்த பக்கத்தில் பார்க்கலாம். இனி, சிறப்பம்சங்கள் -
1. வகைப்படுத்துதல் - ஒவ்வொரு இடுகையையும் சில Labelsகளை கொண்டு வகைப்படுத்தலாம். ப்ளாக்கரில் categories இல்லாத குறை பலருக்கு பெரும் குறையாக இருந்தது. ஏராளமான ஹேக்குகள் இதனால் தோன்றின. இப்போது அந்த குறை நீக்கப்பட்டாயிற்று. என் பக்கத்தில் வலதுபுறத்தில் கவிதை, வழிபாடு போன்ற Labels தோன்றுவதை காணலாம்.
2. WYSIWYG (What you see is what you get) எனப்படும் முறையில் படு சுலபமாக அடைப்பலகையை மாற்றலாம். இந்த வசதியின் தோற்றத்தை கீழ்க்கண்ட படத்தில் பாருங்கள். Add page element என்பதை சொடுக்கி சுட்டிகள், படங்கள், லேபிள்கள் போன்ற பலவற்றை சேர்க்கலாம். சேர்த்தவற்றை Drag and drop செய்து மேலும் கீழும் நகர்த்தமுடியும்!!
வலப்புற பட்டையில் (sidebar) சேர்க்கக்கூடியவற்றில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவை -
- எந்த ஒரு Feedஐயும் உங்கள் பதிவில் காண்பிக்கலாம். Feed என்பது ஒரு வலைத்தளத்தின் முன்னோட்டம் போன்றது. இணையத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய செய்தி தளங்கள், வலைவாசல்கள் ஆகியவற்றுக்கு Feed உள்ளது. ஒரு சோதனைக்கு, என் பக்கத்தில் கூகுள் செய்தி மற்றும் தேன்கூட்டின் முன்னோட்டத்தை சேர்த்திருக்கிறேன்.
- வெளியார் வழங்கும் கருவிகளை எளிதில் சேர்க்கலாம். உதாரணத்துக்கு, அந்நியலோகம் வழங்கும் கருவிகளை சேர்ப்பதற்கு அடைப்பலகையுடன் முட்டிக்கொள்ள தேவையில்லை. சேர்க்கவேண்டிய நிரல்துண்டை கொடுத்து அதற்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தால் போதும்.
3. Comment feed எனப்படும் பின்னூட்டங்களுக்கான முன்னோட்டம்! இதை பயன்படுத்தி உங்கள் பதிவில் அண்மையில் இடப்பட்ட பின்னூட்டங்களை sidebarல் காண்பிக்கலாம்.
4. உங்கள் குடும்பத்தார் அல்லது ஒரு குழுவினர் மட்டுமே பார்க்கக்கூடிய பிரைவேட் வலைப்பதிவு உருவாக்கலாம். அதை எந்தெந்த கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் பார்க்கமுடியும் என்று Settings->Permissions என்ற பக்கத்தில் அரண் போடமுடியும். (இது கொஞ்சம் வம்பான விஷயமும் கூட. அதைப்பற்றி இங்கே பேசவேண்டாம்)
5. கடைசியாக, Republish entire blog எல்லாம் போச்சு. அடைப்பலகையில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்து சேமித்தவுடன் உடனடியாக எல்லா இடுகைப்பக்கங்களும் மாற்றப்படும்.
வலைப்பதிவுலகில் இதைப்பற்றிய சூடு பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த இடுகைகளை படித்து பாருங்கள்.
Significant Blogger Upgrade
Blogger Gets Categories, Comments Feed, Private Blogs, Instant Publishing
ஆவலாக இருந்தால், கூகுள் கணக்கு உருவாக்கி நீங்களே முயன்று பாருங்கள்.












